முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சுவாச நோய் பாதிப்பு..!! மக்களுக்கு திடீரென எச்சரிக்கை விடுத்த கர்நாடகா..!! முகக்கவசம் கட்டாயம்..!!

08:44 AM Nov 29, 2023 IST | 1newsnationuser6
Advertisement

சீனாவில் கடந்த சில வாரங்களாக குழந்தைகள் இடையே சுவாச பாதிப்புகள் அதிகரிப்பு என செய்திகள் வெளிவந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியது. அதில், நிலைமை ஆபத்து ஏற்படும் வகையில் இல்லை என்றும் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தது.

Advertisement

இந்நிலையில், கர்நாடகாவில் பருவகால புளூ வைரசின் பாதிப்புகளை முன்னிட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அது ஒரு தொற்ற கூடிய நோய் என்றும் 5 முதல் 7 நாட்கள் வரை நீடிக்க கூடும் என தெரிவித்தது. இதனால், குறைவான இறப்பு விகிதங்களே உள்ளன என அறியப்படுகிறது. எனினும், குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கும், ஸ்டீராய்டு உள்ளிட்ட நீண்டகால மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்வோருக்கும் அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், காய்ச்சல், சுவையுணர்வு இழப்பு, குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படும். அதிக பாதிப்பு நிலையில் உள்ளவர்களுக்கு 3 வாரங்கள் வரை வறட்டு இருமலும் காணப்படும். மக்கள் இருமும்போதும், தும்மும்போதும் வாய் மற்றும் மூக்கை பொத்தி கொள்ள வேண்டும். அடிக்கடி கை கழுவ வேண்டும். தேவையின்றி முகத்தின் மீது தொட வேண்டாம். கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளில் முக கவசங்களை பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
கர்நாடக மாநிலம்குழந்தைகள்சீனாசுவாச நோய் பாதிப்புபெரியவர்கள்
Advertisement
Next Article