ஏலியன்களை வைத்து ஆய்வு.. 70 ஆண்டுகளாக தொடரும் மர்மம்.. ஏரியா 51-ன் ரகசியங்கள் 2025-ல் வெளியாகுமா?
ஏரியா 51... உலகின் மிகவும் மர்மமான இடங்களில் இந்த ஏரியா 51 தளம் முக்கியமானது. அமெரிக்காவின் தெற்கு நெவாடாவின் தொலைதூர பாலைவனத்தில் உள்ள ஒரு அமெரிக்க விமானப்படை தளமாகும். இங்கு ஏலியன்களை வைத்து அமெரிக்கா சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. விபத்துத் தளங்களில் இருந்து மீட்கப்பட்டதாகக் கூறப்படும் வேற்றுகிரக தொழில்நுட்பத்தைச் சோதிக்க ஏரியா 51 பயன்படுத்தப்படுவதாக பல கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.
ஏரியா 51 லாஸ் வேகாஸுக்கு வடமேற்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில், ரேச்சல் மற்றும் ஹிகோ நகரங்களுக்கு அருகில் அமைந்துள்ளது. ‘ஏரியா 51’ என்ற பெயர், அணுசக்தி கமிஷன் வரைபடத்தில் உள்ள தளத்திற்கு கொடுக்கப்பட்ட லேபிளிலிருந்து உருவானது. இந்த பெயர் பொதுமக்களின் மனதில் நிலைத்திருந்தாலும், இராணுவம், இந்த பெயரை பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை.
ரகசிய சோதனை
ஏரியா 51, 1955 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது நெவாடா சோதனை மற்றும் பயிற்சி ரேஞ்ச் என்றும் அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் பனிப்போரின் போது U-2 உளவு விமானத்தை சோதிக்க இந்த பயன்படுத்தப்பட்டது. அதிக உயரம் மற்றும் அதிவேக இராணுவ விமானங்களை இங்கு சோதனை செய்யப்பட்டன.
பல ஆண்டுகளாக, அதிநவீன இராணுவ தொழில்நுட்பங்களை சோதனை செய்வதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு மையமாக இந்த வசதி உருவாகியுள்ளது.
யு-2 உளவு விமானம் பனிப்போரின் போது சோவியத் யூனியனில் உளவுத்துறையை திரட்டுவதில் முக்கிய பங்கு வகித்த நிலையில், இது போன்ற பல விமானங்கள் ஏரியா 51-ல் ரகசியமாக சோதனை செய்யப்பட்டன.
குறிப்பாக, இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான சோதனை மற்றும் பயிற்சி நோக்கங்களுக்காக இந்த தளம் பயன்படுத்தப்படுகிறது. இராணுவப் படைகளின் தயார்நிலை மற்றும் திறமையை உறுதிப்படுத்த ஆயுத சோதனை, போர் பயிற்சிகள் மற்றும் பைலட் பயிற்சி போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு இது பயன்படுத்தப்படுகிறது.
எனினும் ஏரியா 51 ஐச் சுற்றி பல மர்மங்கள் இருக்கின்றன. சிலர் இந்த தளத்தில் ஏலியன்கள் வாழ்ந்து வருவதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறுகின்றனர்.. அதாவது, 1947 ஆம் ஆண்டில் நியூ மெக்ஸிகோவின் ரோஸ்வெல் அருகே ஒரு பொருள் விழுந்து நொறுங்கியது. இதனை சிலர் UFO என்று கூறுகின்றனர். அப்போது ஏரியா 51 அதிகாரிகள், உடைந்த பாகங்கள் மற்றும் வேற்றுகிரகவாசிகளின் உடல்களை ஏரியா 51 க்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.. அங்கு ஏலியன்களின் உடலை வைத்து ரிவர்ஸ் இன்ஜினியரிங் மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் அங்கு பொதுமக்கள் செய்ய அனுமதி இல்லை. ஏலியன்கள் மற்றும் UFO-க்களை வைத்து சோதனை செய்யப்படுவதாகவும் நம்பப்படுகிறது. எனவே இந்த ஏரியா 51 பகுதியில் என்ன நடக்கிறது என்பது மர்மமாகவே இருக்கிறது.
ஏரியா 51 : தொடரும் மர்மம்
ஏரியா 51-ல் ஏலியன்களை வைத்து ஆராய்ச்சி செய்யப்படுவதாக கூறப்பட்டாலும், இங்கு உயர்-ரகசிய இராணுவ விமானங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.
F-117 Nighthawk, என்ற ஒரு தாக்குதல் விமானம், ஏரியா 51 இல் உருவாக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. 1991 இல் வளைகுடா போரின் போது F-117 வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது. ஏரியா 51 பகுதி இப்போதும் ஆக்டிவாக தான் உள்ளது.
எனினும் இந்த பகுதிக்கு மேல் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிக்குள் யாரும் அத்துமீறி நுழையக்கூடாது என்ற எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
பலத்த பாதுகாப்பு
ஏரியா 51 பகுதியை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு அமெரிக்க விமானப்படை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.. சுற்றியுள்ள பாலைவன நிலப்பரப்பு சென்சார்கள் மற்றும் கண்காணிப்பு கருவிகளால் கண்காணிக்கப்படுகிறது, மேலும் அத்துமீறி நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
ஏரியா 51-ஐச் சுற்றியுள்ள மர்மம் பற்றி எண்ணற்ற புத்தகங்கள், ஆவணப்படங்கள் மற்றும் திரைப்படங்கள் உருவாகி உள்ளன. மர்மமான சோதனைகளை நடத்தும் அரசாங்கத்தின் ஒரு ரகசிய இடம் பற்றி பல்வேறு கோட்பாடுகளும் சர்ச்சைகள்ம் வெளியான வண்ணம் உள்ளன.
வில் ஸ்மித் நடிப்பில் 1996 இல் வெளிவந்த ‘இண்டிபெண்டன்ஸ் டே’ திரைப்படம் ஏரியா 51 மர்மங்கள் தொடர்பான படம் தான்.. ரோலண்ட் எம்மெரிச் இயக்கிய இந்தப் படம் உலகளவில் $817 மில்லியனுக்கும் அதிகமான சம்பாதித்து மாபெரும் வெற்றி பெற்றது. திரைப்படத்தில், ஏரியா 51 என்பது, மனிதகுலம் ஒரு ஏலியன் படையெடுப்பிற்கு எதிராக போராடும் ஒரு முக்கியமான இடமாக சித்தரிக்கப்பட்டது. இதுதவிர பல ஆவணப்படங்களும், தொலைக்காட்சி தொடர்களும் ஏரியா 51 தொடர்பாக வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் ஏரியா 51 இன் தொழிலாளியின் பழைய நேர்காணல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பேசும் அவர் "சுமார் ஒரு வருடம் கழித்து, நாங்கள் மீண்டும், ஏரியா 21-ன் செயல்பாடுகள் குறித்து பேசினோம். அங்கு என்ன நடக்கிறது என்பதை நீங்கள் என்னிடம் சொல்ல முடியுமா? என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், அங்கு நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன, 2025 ஆம் ஆண்டு வரை என்னால் உங்களிடம் சொல்ல முடியாது. ” என்று கூறினார்.
இதன் மூலம் 2025-ல் ஏரியா 51 பற்றிய ரகசியங்கள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த பகுதியில் அப்படி என்ன நடக்கிறது என்ற மர்மம் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் இதற்கான 2025-ல் விடை கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Read More : இந்த நாட்டில் நிலம், மின்சாரம், தண்ணீர், கல்வி ஆகியவை இலவசம்.. ஆனால் இந்த ஒரு விதியை பின்பற்ற வேண்டும்…