Wayanad Landslide | நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 358 ஆக உயர்வு..!! 25 தமிழர்களின் நிலை என்ன?
கேரளாவின் வயநாட்டில் கடந்த 30-ம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 3 கிராமங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இந்த பயங்கர நிலச்சரிவால் வீடுகள் மண்ணில் புதைந்தனர். தற்போதைய நிலவரப்படி 358 பேர் உயிரிழந்துவிட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. உயிரிழப்பு 500-ஐ தாண்டக்கூடும் என்று கேரள அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுவரை 9,328 பேர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
தெர்மல் ஸ்கேனர் மட்டுமன்றி, ட்ரோனில்ரேடார் பொருத்தி தேடும் பணியும் நடைபெறுகிறது. மீட்பு பணியில் மோப்ப நாய்களையும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நிலச்சரிவால் உருவான மண்மேடுகளில் யாராவது சிக்கி உள்ளனரா என்பதை கண்டறிய மோப்ப நாய்கள் சுற்றி வருகின்றன. தன்னார்வலர்கள், பொதுமக்களும் இரவு, பகலாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று 5வது நாளாக மீட்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முண்டக்கை பகுதியில் தெர்மல் ஸ்கேனர் மூலம் மீட்பு பணி நடந்தது. இதில் பலரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. கேரளாவின் கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ளது.
வீடுகளை இழந்த 130 தமிழர்கள் இதுவரை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசி உள்ள தமிழக ஐஏஎஸ் அதிகாரி சமீரன் 25 தமிழர்களின் தகவல் குறித்து கேரளா அரசு அதிகாரிகளிடம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மீட்புப்படையின் ஐந்து குழுக்கள் மோப்ப நாய்களுடன் சூரல்மலை பகுதியில் தேடும் பணிகள் டுபட்டுள்ளதாகவும் ஐஏஎஸ் அதிகாரி சமீரன் தெரிவித்துள்ளார். காணாமல் போயுள்ள தமிழர்கள் குறித்த தகவல் கிடைத்தால் உடனுக்கு உடன் தெரியப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Read more ; Paris Olympics 2024 | இந்திய ஹாக்கி அணி தங்கம் வெல்வது உறுதி..!! – கேப்டன் ஹர்மன்பிரீத்