முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

குடியரசு தினம்!. மெரினாவில் தேசியக்கொடி ஏற்றிய ஆளுநர் ரவி!. முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்!

Republic Day!. Governor Ravi hoists the national flag at Marina!. Welcomed by the Chief Minister with a bouquet!
09:18 AM Jan 26, 2025 IST | Kokila
Advertisement

Republic Day: குடியரசு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே, ஆளுநர் ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

Advertisement

நாட்டின் 76வது குடியரசுத் தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக, கவர்னர் ரவியை முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். முக்கிய அதிகாரிகளை ஆளுநருக்கு முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் தேசிய கொடிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து முப்படை வீரர்கள் மற்றும் போலீசார் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ரவி ஏற்றுக்கொண்டார். சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் நீதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். குடியரசு தினத்தையொட்டி, சென்னையில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Readmore: இலங்கை கடற்படையின் தொடர் அராஜகம்!. 33 தமிழக மீனவர்களை சிறைபிடித்து அட்டூழியம்!

Tags :
ChennaiChief MinisterGovernor Ravimarinarepublic day
Advertisement
Next Article