முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

குடியரசு தினம் 2025!. வனவிலங்கு கருப்பொருளுடன் டூடுல் வெளியிட்டது கூகுள்!. என்ன அர்த்தம் தெரியுமா?

Republic Day 2025!. Google releases doodle with wildlife theme!.
07:07 AM Jan 26, 2025 IST | Kokila
Advertisement

Google: இந்தியா தனது 76வது குடியரசு தினத்தை இன்று கொண்டாடும் நிலையில், இந்தியாவின் செழுமையான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்தி வனவிலங்கு கருப்பொருளுடன் கூடிய டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது.

Advertisement

இணைய தேடு பொறி நிறுவனங்களில் முதன்மை நிறுவனமாக கூகுள் நிறுவனம் விளங்கி வருகிறது. சிறப்பு தினங்களில் தனது தளத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு டூடுலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் உலகின் மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் குடியரசு தினவிழாவினை பிரதிபலிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் தனது டூடுல் அமைப்பை மாற்றி உள்ளது.

அதில், லடாக்கி உடையில் ஒரு பனிச்சிறுத்தை, பாரம்பரிய இசைக்கருவியைுடன் வேட்டி-குர்தா அணிந்த 'புலி' மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளையும் அதன் பன்முகத்தன்மையையும் வெளிப்படுத்தும் சில விலங்குகள் மற்றும் பறவைகள் 76வது குடியரசு தினத்தைக் குறிக்கும் வகையில் டூடுலாக இடம்பெற்றுள்ளன. முதலாம் உலக போருக்கு பின் ஐரோப்பியாவில் துவங்கிய கலை மற்றும் பண்பாட்டு இயக்கமான சர்ரியலிசத்தின் கூறுகள் கலந்த வண்ணமயமான கலைப்படைப்பாக இந்த டூடுல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கூகுள் (Google) ஆறு எழுத்துக்களை கருப்பொருளில் கலைநயத்துடன் பின்னிப் பிணைத்து, 'வனவிலங்கு அணிவகுப்பு' தோற்றத்தை அளிக்கிறது.

கூகுள் வலைதளத்தில் டூடுலின் விளக்கமாக, "இந்த டூடுல் இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறது. இது தேசிய பெருமை மற்றும் ஒற்றுமையை குறிக்கும் நாள் ஆகும்," என்று கூறுகிறது. இந்த ஓவியத்தை புனேவைச் சேர்ந்த கலைஞர் ரோஹன் தஹோத்ரே வரைந்துள்ளார். அணிவகுப்பில் சித்தரிக்கப்பட்டுள்ள விலங்குகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைக் குறிக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது.

Readmore: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ ஆதரவு முதல் கும்பமேளா வரை!. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையின் முக்கிய அம்சங்கள்!

Tags :
DoodleGoogle releasesRepublic Day 2025wildlife
Advertisement
Next Article