முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

முன்பே எச்சரிக்கை விடுத்த ஆய்வுகள்..!! இத்தனை உயிர்போக இதுதான் காரணமா..?

Reports have surfaced that many studies have warned of landslides in Kerala.
04:55 PM Aug 02, 2024 IST | Chella
Advertisement

தற்போது நாட்டையே உலுக்கிய ஒரு சம்பவம் தான், கேரளா நிலச்சரிவு. இதில் சுமார் 310-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கேரளாவில் நிலச்சரிவு ஏற்படும் என்று பல ஆய்வுகளில் எச்சரிக்கை விடப்பட்டது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

Advertisement

கேரளாவில் நிகழ்ந்த நிலச்சரிவின் முக்கிய காரணம், காலநிலை மாற்றம், காடுகள் அழிப்பு, நிலப்பரப்பில் ஏற்பட்ட விரிசல் போன்றவைதான். கடந்தாண்டு இஸ்ரோ ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதாவது நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருக்கக்கூடிய 30 மாவட்டங்களை பட்டியலிட்டு வெளியிட்டிருந்தது. அந்தப் பட்டியலில், சுமார் 10 மாவட்டங்கள் கேரளாவின் மாவட்டங்களே குறிப்பிடப்பட்டிருந்தன. அதில் வயநாடு 13-வது இடத்தில் இருந்தது.

மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கொங்கன் மலைகளில் (தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா மற்றும் மகாராஷ்டிரா) 0.09 மில்லியன் சதுர கிலோமீட்டர் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. மேலும், அந்த அறிக்கையில் தெளிவாக ஒரு விஷயம் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, மேற்கு தொடர்ச்சி மலைகளில் மக்கள் அதிகமாக இருப்பதால், அதிகளவு பாதிப்பு ஏற்படும் இடமாக அது மாறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2021இல் ஸ்பிரிங்கர் வெளியிட்ட ஒரு ஆய்வில், கேரளாவில் நிலச்சரிவு ஏற்படும் இடங்கள் அனைத்தும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இருப்பதாகவும் இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், வயநாடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 2022இல் நடத்தப்பட்ட ஆய்வில், 1950 மற்றும் 2018-க்கு இடையில் 62 சதவீத காடுகள் காணாமல் போயுள்ளன. அதே நேரத்தில் தோட்டப் பரப்பு சுமார் 1,800 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 1950ஆம் ஆண்டு கேரளாவில் 85% காடுகள் இருந்தன என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. காடுகள் அழிக்கப்படுவதால், இனி வரும் காலங்களில் நிலச்சரிவு அபாயங்கள் ஏற்படும் என்று சொல்லப்பட்டது.

கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (குசாட்) வளிமண்டல ரேடார் ஆராய்ச்சிக்கான மேம்பட்ட மையத்தின் இயக்குநர் எஸ் அபிலாஷ் பேசுகையில், அரபிக்கடலில் வெப்பமயமாதல் அதிக அளவு மேக அமைப்புகளை உருவாக்கியுள்ளதால், குறுகிய காலத்தில் அதிக மழை பெய்யும். இது நிலச்சரிவின் வாய்ப்பை அதிகரிக்கும். ஆகையால் சுரங்கம், குவாரிகள், புதிய அனல் மின் நிலையங்கள், நீர் மின் திட்டங்கள் மற்றும் பெரிய அளவிலான காற்றாலை ஆற்றல் திட்டங்கள் ஆகியவற்றை தடை செய்ய பரிந்துரைக்கப்பட்டது. கடந்த 2011ஆம் ஆண்டே இந்த அறிக்கை வெளியிடப்பட்டு, பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று வரை எதுவுமே செய்யவில்லை என்பதே, ஒருவேளை உயிர்பலிக்கு காரணமாக அமைந்ததோ என்னவோ?

Read More : மின் கட்டணம் செலுத்துவோருக்கு முக்கிய எச்சரிக்கை..!! மக்களே உஷாரா இருங்க..!!

Tags :
Keralaநிலச்சரிவு
Advertisement
Next Article