பாக் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசிற்கு எதிராக செய்தி வெளியிட்ட நிருபர்!… பாதுகாப்புப் படையினரால் கடத்தல்!
Kashmiri Journalist: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்(POK) நடந்துவரும் அமைதியின்மைக்கு மத்தியில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்டதாக பாதுகாப்பு படையினரால் செய்தியாளர் கடத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்தநிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்த செய்தியாளர் அகமது ஃபர்ஹாத், அப்பகுதியில் சமீபத்தில் நடந்த போராட்டம் காரணமாக ஏற்பட்ட அமைதியின்மை குறித்த செய்திகள் அடங்கிய அறிக்கை அளித்தார். அதாவது, இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற கண்டனப் பேரணியின் போது, ஃபர்ஹாத்தின் மனைவி ஒரு வேண்டுகோள் விடுத்தார், அதில், அனைத்து காஷ்மீரிகளும் மற்றும் கூட்டு அவாமி நடவடிக்கை குழுவும் அவரை உடனடியாக விடுவிக்க குரல் எழுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட அரசுக்கு எதிராக அறிக்கையை ஃபர்ஹாத் அளித்திருந்தார்.
இதையடுத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள வீட்டில் இருந்து செய்தியாளர் அகமது ஃபர்ஹாத் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அரசிற்கு எதிராக அறிக்கை அளித்த நிலையில், பாதுகாப்பு படையினரால் அவர் கடத்தப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்து வருகின்றனர்.
இதுதொடர்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு - காஷ்மீர் மனித உரிமை ஆர்வலர் அம்ஜத் அயூப் மிர்சா கூறியதாவது, முசாஃபராபாத்தில் இணைய சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும்,கலவரத்தைத் தூண்டுதல், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துதல், கலவரங்களில் பங்குபற்றுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ஏராளமான நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன என்று கூறினார். PoJK அரசாங்கம் ஒரு விரிவான ஒடுக்குமுறை திட்டத்தை வகுத்து வருவதாக மிர்சா குற்றம்சாட்டினார்,
அகமது பர்ஹாத் ஷா கடத்தப்பட்டு பலவந்தமாக காணாமல் போனது ஒடுக்கப்பட்ட காஷ்மீரிகளின் குரலை அடக்குவதற்கான ஒரு வருந்தத்தக்க முயற்சியாகும் என்று UKPNP இன் தலைவரான சர்தார் ஷௌகத் அலி காஷ்மீரி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Readmore: கோவிஷீல்டால் பேராபத்து!… ஒரே மாதிரியான ஆபத்து ஆன்டிபாடிகள் உற்பத்தி!… மரபணுவை நேரடியாக தாக்கும்!