முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

#Tngovt: தினமும் காலை 11 மணிக்குள் அறிக்கை அனுப்ப வேண்டும்...! அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

06:10 AM Nov 21, 2023 IST | 1newsnationuser2
Advertisement

சத்துணவு அறிக்கையை குறுஞ்செய்தியாக தினமும் காலை 11 மணிக்குள் மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இது குறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை; தமிழகத்தில் அரசு, உதவி பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம், அளவை உறுதி செய்ய ஏதுவாக தானியங்கி கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் சத்துணவு குறித்த தகவல்கள் குறுஞ்செய்தியாக அந்தந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு தினந்தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

Advertisement

சமீபத்தில் மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது பல்வேறு பள்ளிகளில் AMS அமைப்பு மூலம் தினசரி சத்துணவு அறிக்கையை தலைமை ஆசிரியர்கள் முறையாக மாவட்ட சமூக நலத்துறைக்கு அனுப்பாமல் உள்ளதாக சமூக நலத்துறை சார்பில் கடிதம் வந்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். AMS அமைப்பு மூலம் சத்துணவு அறிக்கையை குறுஞ்செய்தியாக தினமும் காலை 11 மணிக்குள் மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Edu departmentmk stalintn governmentwelfare scheme
Advertisement
Next Article