முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'பழைய மீட்டர்களை மாற்றி ஸ்மார்ட் மீட்டர்கள்’..!! தமிழ்நாடு முழுவதும் மின்சாரத்துறை அதிரடி..!!

It has been decided to replace the old meters currently in use in many areas across Tamil Nadu with smart meters.
04:57 PM Sep 27, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் பழைய மீட்டர்களை மாற்றி ஸ்மார்ட் மீட்டர்கள் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதல் கட்டமாக 1.26 லட்சம் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் மீட்டர்களில் தானாகவே குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட அளவு மின்சார பயன்பாட்டை காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஸ்மார்ட் மீட்டர்களை தமிழகம் முழுவதும் பொருத்துமாறு மத்திய அரசு மாநில அரசுக்கு நிதி ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் ஸ்மார்ட் மீட்டர்கான டெண்டர் சென்ற ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற நிலையில் இதுவரை யாருக்கும் டெண்டர் வழங்கப்படவில்லை. இந்த ஸ்மார்ட் மீட்டர் இணைப்பு அதிகம் செயல்படுத்தப்பட்ட மாநிலங்களில் இந்திய அளவில் தமிழ்நாடு 12-வது இடத்தில் உள்ளது.

இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டம் பீகார், அசாம், ஹரியானா மாநிலங்களில் தீவிரமாக செயல்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் 1.55 லட்சம் மின் மீட்டர்களை பழுதாகி இருப்பதாகவும், இதனை சரி செய்யும் பணியில் மின்சார துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 29,217 மீட்டர்களும், 6606 மீட்டர்களும் பழுதாகியிருப்பது தெரியவந்திருக்கிறது.

Read More : ’அவரு வடிவேலு இல்ல குடிவேலு’..!! பல நாள் உண்மையை போட்டுடைத்த பிரபல இயக்குனர்..!!

Tags :
தமிழ்நாடு அரசுமின்சார வாரியம்ஸ்மார்ட் மீட்டர்கள்
Advertisement
Next Article