முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சிறுமியுடன் பலமுறை பலாத்காரம்..!! தாலி கட்டி அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் கொடுத்த இளைஞர்..!! பகீர் சம்பவம்..!!

He threatened to post photos and videos on social media if she did not have sex with him.
04:14 PM Nov 15, 2024 IST | Chella
Advertisement

திருச்சி மாவட்டத்தில் உள்ள மருங்காபுரி பகுதியில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர், அதே பகுதியில் வசிக்கும் சிறுமியிடம் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, வெங்கட்ராமன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

Advertisement

இதை வீடியோவாகவும் வெங்கட்ராமன் எடுத்து வைத்துள்ளார். அதனை காண்பித்து மிரட்டி சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். மிரட்டலுக்கு பயந்து சிறுமி அதை யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், சிறுமியின் குடும்பத்தினர் வேறு ஒரு பகுதிக்கு குடி பெயர்ந்தனர். ஆனாலும், வெங்கட்ராமன் சிறுமியை மிரட்டி அவருக்கு தாலி கட்டி அதனையும் போட்டோ எடுத்து வைத்துள்ளார்.

தன்னுடன் உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை என்றால், புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறிய நிலையில், இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், வெங்கட்ராமனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Read More : புற்றுநோயை உண்டாக்கும் உப்பு..!! அதிகளவு சேர்த்துக் கொண்டால் ஆப்பு..!! ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்..!!

Tags :
சிறுமிதிருச்சி மாவட்டம்பாலியல் பலாத்காரம்
Advertisement
Next Article