For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"'Rental House Agreement'… அதில் இருக்கும் சாதகங்கள் பாதகங்கள் என்ன.? வழக்கறிஞர் விளக்கம்.!

01:52 PM Feb 18, 2024 IST | 1newsnationuser7
  rental house agreement … அதில் இருக்கும் சாதகங்கள் பாதகங்கள் என்ன   வழக்கறிஞர் விளக்கம்
Advertisement

Rental House Agreement: இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர் . இத்தகைய வாடகை வீடுகளில் வசிக்கும் போது அவர்களுக்கு வீட்டின் ஓனரிடம் இருந்து பல்வேறு விதமான இடைஞ்சல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும் வீட்டின் பராமரிப்பை யார் மேற்கொள்வது மற்றும் வீட்டிற்கு பெயிண்ட் அடிப்பது தொடர்பான விஷயங்களில் வீட்டின் முதலாளி மற்றும் குடியிருப்போர் இடையே பிரச்சனை ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக இருக்கின்றன. இவற்றை தவிர்ப்பதற்கான வலியையும் வாடகை வீட்டில் குடியிருக்கும் போது காண்ட்ராக்ட் போட வேண்டியதன் அவசியத்தையும் பிரபல வழக்கறிஞர் அஜிதா விளக்குகிறார் .

Advertisement

இது தொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பொதுவாக வாடகை வீட்டின் ஒப்பந்தங்கள் 11 மாதங்களுக்கு போடப்படுகிறது 12 மாதங்களுக்கு ஒப்பந்தம் போடும்போது வாடகை தொகையில் ஒரு சதவீதத்தை கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை தவிர்ப்பதற்காக பெரும்பாலானவர்கள் 11 மாதங்கள் ஒப்பந்த முறையையே தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாக தெரிவித்திருக்கிறார். 2019 ஆம் ஆண்டு முதல் வாடகை வீடு ஒப்பந்தம் தொடர்பான சட்டங்கள் பெருமாளவில் மாறி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த புதிய சட்டங்களில் வீட்டில் குடியிருப்பவர்கள் மற்றும் வீட்டின் ஓனர் ஆகியோருக்கான நெறிப்படுத்தப்பட்ட வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் .

ஆனால் பெரும்பாலானவர்கள் இந்த ஒப்பந்தத்தை பின்பற்றுவதில்லை எனவும் தெரிவித்திருக்கிறார். வாடகை வீட்டில் குடியிருக்கும் போது ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை என்றால் வீட்டின் ஓனர் வாடகையை உயர்த்தினாலோ அல்லது வேறு ஏதேனும் புதிய நிபந்தனைகளை விதித்தாலோ இது தொடர்பாக நீதிமன்றத்தை நாட முடியாது என தெரிவித்திருக்கிறார். இதேபோன்று வீட்டில் இருப்பவர்கள் வீடை காலி செய்ய மறுத்தாலோ அல்லது வாடகை தர மறுப்பு தெரிவித்தாலும் வீட்டின் முதலாளியும் வழக்கு தொடர முடியாது . எனவே வாடகை வீடு தொடர்பான காண்ட்ராக்ட் மேற்கொள்வதே அனைவருக்கும் சிறந்தது என கூறினார்.

அதேபோல வீடுகளின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு செலவுகளையும் வீட்டின் ஓனர் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். ஒரு வீட்டிற்கு ஒரு நபர் புதியதாக குடி வரும்போது வீட்டில் தானே பெயிண்டிங் செலவு மற்றும் வீடு பழுது பார்த்தல் போன்றவை அந்த வீட்டின் ஓனரையே சேரும் எனக் குறிப்பிட்டார். எனினும் வீட்டிற்கு குடி வந்த பிறகு ஏற்படும் பயன்பாடு தொடர்பான சேதாரங்கள் வீட்டில் குடியிருப்பவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என சட்டம் கூறுவதாக தெரிவித்திருக்கிறார்.

உதாரணமாக ஒரு வீட்டில் குடியிருக்கும் போது நாம் பயன்படுத்தும் ஸ்விட்ச் உடைந்து விட்டது அல்லது நல்லி மற்றும் பைப்புகளில் சேதம் அடைந்து விட்டது என்றால் அதனை வீட்டில் குடியிருப்பவர் சரி செய்ய வேண்டும். அதேநேரம் அந்த வீட்டிற்கு குடி வருவதற்கு முன் இருக்கும் அனைத்து பழுது பார்ப்புகளும் ஹவுஸ் ஓனரை சேரும் என தெரிவித்தார். வீட்டில் குடியிருக்கும் போது சிறு குழந்தைகள் ஓவியங்களை சுவற்றில் வரைந்திருந்தால் வீட்டை காலி செய்யும்போதோ அல்லது வீட்டின் பழுது பார்ப்பின் போது வீட்டில் குடியிருப்பவர் பெயிண்டிங் செலவை ஏற்க வேண்டும் என சட்டம் கூறுவதாக தெரிவித்திருக்கிறார் . பொதுவாக ஹவுஸ் ஓனர் மற்றும் வீட்டில் குடியிருக்கும் நபர் ஆகியோருக்கிடையே ஒப்பந்தம் மேற்கொள்வதே சரியான அணுகுமுறை என தெரிவித்துள்ளார்.

English Summary

A famous lawyer speaks about rental house agreement its merits and demerits in an interview. It gives an insight about the laws regarding rental house policies.

Tags :
Advertisement