முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பெரும் சோகம்...! 5 தேசிய விருது பெற்ற பிரபல எழுத்தாளர் காலமானார்...!

Renowned Malayalam writer M.D. Vasudevan Nair passed away due to ill health.
05:55 AM Dec 26, 2024 IST | Vignesh
Advertisement

மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் உடல் நலக்குறைவால் காலமானார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நெஞ்சு வலி காரணமாக கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாசுதேவன் நாயருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இன்று மாலை அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். வாசுதேவன் நாயர் முன்பே தெரிவித்து விட்டதால் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டதுள்ளது.

Advertisement

எம்.டி.வாசுதேவன் நாயர் மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர். அவரது பல்வேறு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு அண்மையில் ‘மனோரதங்கள்’ என்ற பெயரில் ஆந்தாலஜியாக வெளியானது. மலையாள இலக்கியம் மற்றும் திரையுலகில் அழியாத முத்திரை பதித்த எம்.டி.வாசுதேவன் நாயர் பத்ம பூஷண் விருது பெற்றவர். இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீடம் விருது கடந்த 1996-ம் ஆண்டு அவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் சிறந்த திரைக்கதைக்காக 4 தேசிய விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Keralanational awardpassed awayTm naiarwriter
Advertisement
Next Article