நீரிழிவு நோய்க்கு குட் பாய் சொல்ல வேண்டுமா?? அப்போ இதை எல்லாம் சாப்பிடுங்க..
சுகர் இல்லாத ஆளே இல்லை என்று கூறும் அளவிற்கு, சுகர் ஒரு சாதாரண நோயாக மாறிவிட்டது. தவறான உணவுப் பழக்கங்கள், உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது, போன்ற பல்வேறு காரணங்களால் சுகர் ஏற்படுகிறது. இதற்கு மருந்துகள் உள்ளது. ஆனால், அந்த மருந்துகள், இந்த நோய்க்கு நிரந்தர தீர்வு கொடுக்குமா என்று கேட்டால், அது சந்தேகம் தான். அதனால் இந்த நோய்க்கு, மருத்துவ சிகிச்சையுடன், சரியான உணவு முறையும் பின் பற்ற வேண்டும். அந்த வகையில், ஒரு சில உணவுகளை சாப்பிடுவதால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியும்.. அந்த உணவுகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..
வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் நிறைந்துள்ள, பச்சை இலை காய்கறிகளில் நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. இதனால், இரத்த சர்க்கரை அளவு மெதுவாகத்தான் உயரும். புரதம், நார்ச்சத்து மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீடு ஆகியவை கொண்ட பருப்பு வகைகள், நமது உடலுக்கு மிகவும் நல்லது. இவை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, நீண்ட நேரம் நிறைவான உணர்வைத் தருவதால் சர்க்கரை நோயாளிகள் பருப்பு வகைகளை சாப்பிடலாம். முட்டையில் புரதம் நிறைந்துள்ளதால், இரத்த சர்க்கரை அளவை மெதுவாகத்தான் உயர்த்தும்.
பாதாம், பிஸ்தா போன்ற விதைகளில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளது. இதனால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ள மீன் வகைகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சுகர் அளவையும் கட்டுக்குள் வைத்துக்கொள்கிறது. சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் ஆப்பிள், பேரிக்காய், பெர்ரி போன்ற பழங்களை தோலுடன் சாப்பிட வேண்டும்.
Read more: சளி, இருமலுக்கு குட்பை சொல்லணுமா..? வீட்டில் இருக்கும் இந்த 3 பொருட்களே போதும்.