நீங்க அதிகமா குறட்டை விடுவீங்களா? அப்போ டெய்லி இத ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க..
தூக்கம் தொடர்பான பிரச்சனைகளில் ஒன்று குறட்டை. பொதுவாக குறட்டை விடுபவர்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால், அவர்களுக்கு அருகில் படுப்பவர்கள் தான் அதிகம் சிரமப்படுவார்கள். ஒரு சிலர், குறைவான சப்தத்தில் குறட்டை விட்டு தூங்குவார்கள். இன்னும் சிலர் அருகில் யாரும் படுக்க முடியாத அளவில் குறட்டை விடுவார்கள். தூக்கத்தில் வாய் மற்றும் மூக்கின் வழியாக சுவாசிக்கும் போது ஏற்படும் தடைகளால் தொண்டை திசுக்களில் ஏற்படும் அதிர்வுகளின் ஓசை தான் குறட்டை. இப்படி குறட்டை விடுவதற்கு, உடல் பருமன், மூக்கு அல்லது தொண்டையின் அசாதாரண அமைப்பு, மூக்கடைப்பு, மதுப்பழக்கம் போன்ற பல காரணங்கள் உண்டு. இப்படி குறட்டை விடுவதற்கு தீர்வே இல்லையா என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால், குறட்டை விடுவதை தடுக்க பல வழிகள் உள்ளது.
அதில் எளிமையான ஒரு வழி என்றால் அது உணவு தான். ஆம், உணவே மருந்து என்ற வாக்கியம் உங்களுக்கே நன்கு தெரியும். அந்த வகையில், அதிக மருத்துவ குணம் கொண்ட தேன் குறட்டையைக் குறைக்க உதவும். Mirror.co.uk இன் அறிக்கையின்படி, தேனை இரவு நேரத்தில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், குறட்டை இல்லாத நல்ல நிம்மதியான மற்றும் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற முடியும் என்று தூக்க நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு நீங்கள், ஒரு ஸ்பூன் தேனை இரவு தூங்கும் முன் அப்படியே சாப்பிடலாம் அல்லது தூங்கும் முன் ஒரு கப் சுடுநீர் அல்லது இஞ்சி டீயுடன் சேர்த்து கலந்தும் குடிக்கலாம்.
இதற்க்கு மற்றொரு தீர்வு, பக்கவாட்டில் தூங்குவது. தூங்கும் போது பக்கவாட்டில் ஒருபக்கமாக திரும்பி, தலையை உயர்த்திய நிலையில் வைத்து தூங்கினால், காற்றோட்டம் சீராக இருந்து, குறட்டை வருவது குறையும். உடலில் நீர்ச்சத்து போதுமான அளவு இல்லை என்றாலும், குறட்டை அதிகரிக்கும். அதனால், நீங்கள் நன்கு எனவே குறட்டை வராமல் இருக்க வேண்டுமானால், போதுமான அளவில் நீரைக் குடியுங்கள்.