கழுத்தில் கருமையா..? முகத்தில் தேமலா..? இந்த ஒரு காய் போதும்..!
சருமத்தை பாதுகாப்பத்தில் பலரும் இயற்கை முறையை விரும்புவர். குறிப்பாக அவற்றை தாங்களே வீட்டில் செய்து உபயோகிக்கவும் செய்வர். அந்த வகையில் மிகவும் எளிதான முறையில் பூவரசம் காயை கொண்டு தேமல், படர்தாமரை, சொறிசிரங்கு, கழுத்தில் நகை போடுவதால் ஏற்படும் கருமை போன்றவற்றை நீக்கும் முறையை இந்த பதிவில் பார்க்கலாம்.
பூவரசம் மரத்தின் காய், பூ, இலை என அனைத்தும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கிருமிநாசினியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பூவரசம் பூவினை நீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைத்தால் அதன் நிறம் நீரில் கலந்துவிடும். இந்த நீரினை கிருமிநாசி போல் நாம் இருக்கும் இடத்தை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். இந்த நீர் மிகவும் வாசனையாகவும் இருக்கும். கொரோனா பேரிடர் காலத்தில் கிராம மக்கள் இந்த வழிமுறையை பின்பற்றினர்.
அதே போல் பூவரசம் காயை மஞ்சள் உரசுவது போல் உரசினாலோ அல்லது இடித்து அரைத்தாலோ ஒருவகை திரவம் கிடைக்கும். இதனை தேமல், படர்தாமரை, சொறிசிரங்கு, கழுத்தில் நகை போடுவதால் ஏற்படும் கருமை போன்ற சருமப்பிரச்சனை உள்ள இடங்களில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால் விரைவில் குணமடையும்.
Read more: கணவன், மனைவி முத்தமிடுவதை நிறுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா? கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்..