கழுத்து மட்டும் ரொம்ப கருப்பா இருக்கா?? அப்போ கட்டாயம் இதை படியுங்கள்..
பொதுவாகவே ஒருவர் தனது முகத்திற்கு கொடுக்கும் அக்கறையை உடலின் மற்ற பாகங்களுக்கு கொடுப்பதில்லை. குறிப்பாக பெண்கள், முகத்திற்கு அத்தனை பக்குவமும், அத்தனை கிரீமும் போட்டு பாதுகாப்பது உண்டு. ஆனால் பல நேரங்களில், அவர்களின் கழுத்தை பராமரிக்க மறந்துவிடுகின்றனர். ஆனால், முகத்தை விட அதிகம் பராமரிப்பு கழுத்துக்கு தான் தேவை படுகிறது. ஏனென்றால், கழுத்தில் நிறைய வியர்வை தங்குகிறது மேலும் நகைகளை நாம் கழுத்தில் அணிவதால், நிறைய சரும பாதிப்புகள் ஏற்படுகிறது. ஒரு சிலரின் முகம், பளபளப்பாக இருக்கும். ஆனால் அவர்களின் கழுத்து மிகவும் கருப்பாக இருக்கும். இதனால் பார்பதற்கு அழகாக இருக்காது. இதற்காக பலர் பல ஆயிரங்கள் செலவு செய்து மருத்துவரிடமும், பார்லருக்கும் செலவு செய்வது உண்டு. இனி நீங்கள் அதற்காக செலவு செய்ய வேண்டாம். வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே உங்கள் கழுத்தின் கருமையை நீக்கி விடலாம்.
கழுத்தின் கருமையை போக்க மிகவும் உதவுவது, எலுமிச்சை. இயற்கை பிளீச் ஆக எலுமிச்சை செயல்படுவதால் இது உங்கள் கழுத்தின் கருமையை விரைவாக போக்கிவிடும். இதற்க்கு நீங்கள், தினசரி குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக எலுமிச்சை சாற்றினை கழுத்தில் தடவி ஊறவைத்து பின்னர் குளிக்கவும். இப்படி நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால், கழுத்தின் கருமை படிப்படியாக மறைந்து விடும்.
இதற்க்கு பதில் நீங்கள் பால்பவுடரை பயன்படுத்தலாம். இதற்க்கு, ஒரு டீஸ்பூன் பால் பவுடர், ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, அரை டீ ஸ்பூன் பாதம் எண்ணெய் கலந்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த கலவையை கழுத்து பகுதியில் தேய்த்து, 15 நிமிடம் ஊறவைத்து, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இப்படி வாரம் ஒருமுறை செய்தால் உங்கள் கழுத்தின் கருமை நீங்கி பளிச் ஆகும்.
கழுத்து கருமையை போக்குவதில் மஞ்சள்தூள் சிறந்த நிவாரணி. சிறிதளவு மஞ்சள்தூள், சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து கழுத்து கருமை பகுதியில் அப்ளை செய்து கழுவினால், கழுத்துக் கருமை போகும். நீங்கள் உருளைக்கிழங்கை சீவி அதன் சாரை கழுத்தில் தேய்த்தாலும், கழுத்தின் கருமை படிப்படியாய் மறையும். அதேபோல் தக்காளியை பிழிந்து, அதன் சாறுடன், எலுமிச்சை சாறு கலந்து தேய்த்தாலும் கழுத்தில் உள்ள கருமை நீங்கிவிடும். உங்களது கழுத்தில் இருக்கும் கருமை போக மிக சுலபமான வழி என்றால் அது அரிசி தண்ணீர் தான். அரிசி தண்ணீரை கழுத்தில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளித்தால் நல்ல பயன் தரும்.
Read more: நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழணுமா? அப்ப தினமும் காலையில் இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க..