மூலநோயை முற்றிலுமாக குணப்படுத்தும் வெங்காயம் மற்றும் வெந்தயம்.! எப்படி பயன்படுத்தலாம்.!?
பொதுவாக உள்மூலம், வெளிமூலம், ரத்த மூலம் என பலவகையான மூல நோய்கள் உள்ளன. நாள்பட்ட மலச்சிக்கல் காரணமாக மூல நோய் உருவாகிறது. எனவே மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படாமல் பார்த்துக் கொள்வதே மூல நோய்க்கு சிறந்த தீர்வாக கருதப்பட்டு வருகிறது. மேலும் மூல நோய்க்கு பல மருந்துகள் எடுத்து வந்தாலும் எதிலும் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என்று கவலைபடுகிறீர்களா.! உங்களுக்கு தான் இந்த பதிவு..
மூல நோய்க்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிய மருந்து செய்ய தேவையான பொருட்கள் :
சின்ன வெங்காயம், வெந்தயம், தேன், தண்ணீர்
செய்முறை :
முதலில் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு வெந்தயத்தை ஒரு கடாயில் மிதமான சூட்டில் வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சின்ன வெங்காயம், வெந்தயப்பொடி ஊற்றி நன்றாக கொதிக்க விட்டு வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால் மூல நோய் முற்றிலுமாக குணமடையும்.
மூல நோய் குணமடைய மற்றுமொரு வீட்டு மருத்துவத்திற்கு தேவையான பொருட்கள் :
நாயுருவி இலை, மஞ்சள் தூள்
முதலில் நாயுருவி இலையை நிழலில் காய வைத்து மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். இந்த பொடியில் மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் கலந்து மூலம் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் மூல நோயால் ஏற்பட்ட புண்கள், கட்டிகள் குணமாகும்.