மார்பு சளியை வெளியேற்ற இந்த ஒரு பொடி போதும்.! பயன்படுத்தி பாருங்க.!?
பொதுவாக பலருக்கும் குளிர்காலத்திலும் சரி, வெயில் காலத்திலும் சரி சளி தொல்லை அதிகமாக இருக்கும் . இதனால் அதிகமாக காய்ச்சல், தலைவலி போன்ற நோய்கள் ஏற்படுகின்றது. மேலும் மார்பு மற்றும் நுரையீரல் பகுதியில் சளி தேங்கி கொண்டு மூச்சு விட சிரமப்படுதல் போன்ற பிரச்சனைகள் உருவாகிறது. இவ்வாறு மார்பு பகுதியில் தேங்கி கிடக்கும் சளியை தானாகவே வெளியேற வைக்க இந்த வீட்டு வைத்திய முறையை செய்து பாருங்கள்?
தேவையான பொருட்கள்
திப்பிலி, சுக்கு, மிளகு, அதிமதுரம், தேன், துளசி, பூண்டு
செய்முறை
முதலில் துளசி மற்றும் சுக்கு காயவைத்து பொடி செய்து கொள்ளவேண்டும். பின்பு ஒரு கடாயில் திப்பிலி, மிளகு, அதிமதுரம் போன்றவற்றை தனித்தனியாக போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். மேலும் அதே கடாயில் எட்டு பல் பூண்டு சேர்த்து வறுக்கவும். பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து வைத்த மிளகு, திப்பிலி, அதிமதுரம், பூண்டு போன்றவற்றை போட்டு நன்றாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் காற்று புகாத ஒரு டப்பாவில் துளசி மற்றும் சுக்கு பொடி, அதிமதுரம், மிளகு கலந்து அரைத்த பொடி மற்றும் தேன் கலந்து மூடி வைத்துக் கொள்ளலாம். இதை காலை, மாலை என இரு வேளைகளிலும் சாப்பிடலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு சளி, இருமல், மூச்சடைப்பு போன்ற பிரச்சனைகளையும் சரி செய்து மார்பு பகுதியில் தேங்கியுள்ள சளியை வெளியேற்றுகிறது.