வழுக்கை தலையில் முடி வளர வைக்கும் அதிமதுரம் எப்படி பயன்படுத்தலாம்.!?
பொதுவாக ஆண்களுக்கு தற்போதுள்ள காலகட்டத்தில் முடி உதிர்ந்து வழுக்கை தலையாக இருப்பது மிகவும் கடினமான ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. வேகமான வாழ்க்கை முறை, தூக்கமின்மை, மன அழுத்தம், துரித உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, மரபியல் காரணம் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் ஆண்களுக்கு முடி உதிர்ந்து வழுக்கை தலையாக இருப்பதற்கு காரணமாக இருந்து வருகிறது.
ஆண்களுக்கு 40 வயதை தாண்டியும் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் திருமணமாகாமல் அவதியுற்று வருகின்றனர். இதற்கு வழுக்கை தலையும் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. வழுக்கை தலையில் செயற்கை முறையில் முடி வளர வைப்பதை தற்போது பல அழகு நிலையங்களிலும் செய்து வருகின்றனர். ஆனால் இது நீண்ட நாட்களுக்கு நிலைத்து நிற்காது.
மேலும் ஒரு சில வீட்டு வைத்தியமுறை படி வழுக்கை தலையிலும் முடி வளர வைக்கலாம் என்று நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது நம் நாட்டு மூலிகையான அதிமதுரத்தை அம்மியில் வைத்து எருமை மால் சிறிது சிறிதாக விட்டு நைசாக அரைக்க வேண்டும். பின்பு இந்த கலவையை தலையில் தேய்த்து 30 நிமிடங்களுக்குப் பின்பு குளிக்க வேண்டும் இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் வழுக்கை தலையிலும் முடி வளரும்.
வேப்பஎண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் மூன்றையும் சம அளவிற்கு எடுத்து சூடு செய்து வெதுவெதுப்பாக தலையில் தேய்த்து வர வேண்டும். இவ்வாறு தேய்த்து வந்தால் முடியின் வேர்களில் எண்ணெய் சென்று முடி வளர வழிவகுக்கும். இவ்வாறு ஒரு சில செயல்முறைகளின் மூலமே வழுக்கை தலையிலும் முடி வளர வைக்கலாம். ஆனால் தாத்தா, அப்பா போன்றவர்களுக்கும் தலை வழுக்கை இருந்து ஜீன் பிரச்சனையின் காரணமாக முடி உதிர்ந்து வழுக்கை தலையாகும். அத்தகைய நபர்களுக்கு இந்த வைத்திய முறையில் முடி வளர வைக்க முடியாது.