இளம் வயதிலேயே நரைமுடி தொல்லையா.! தேங்காய் எண்ணெய் இப்படி பயன்படுத்தி பாருங்கள்.!?
தற்போதுள்ள இளம் தலைமுறையினரான 18 முதல் 25 வரையுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நரைமுடி ஏற்படுவது மிகப்பெரும் தொல்லையாக இருந்து வருகிறது. அந்த காலகட்டத்தில் 30 வயதை தாண்டிய பின்னர் தான் நரைமுடி வளரும். ஆனால் தற்போதுள்ள உணவு பழக்கங்களினாலும், வாழக்கை முறையினாலும் பல விதமான நோய்கள் ஏற்படுகின்றன. அதில் நரைமுடியும் ஒன்று.
மேலும் மரபு வழியாகவும் இந்த நரைமுடி பிரச்சனை ஏற்படும். இவ்வாறு இளம் தலைமுறையினருக்கு நரைமுடி வளருவது அவர்களுக்கு எதிர்காலத்தை குறித்த பயமும், தன்னம்பிக்கை இல்லாமலும் இருக்க செய்கிறது. இதனால் நண்பர்களும் உறவினர்களும் கேலி, கிண்டல் செய்வதால் அவமானமாக கருதுகின்றனர்.
பொதுவாக முடி உதிர்தல், வழுக்கை தலை, நரை முடி போன்ற பிரச்சனைகள் மரபு வழியாக வந்துள்ளது என்றால் அதை சரி செய்ய இயலாது. அப்படியில்லை என்றால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயுடன் ஒரு சில பொருட்களை சேர்ப்பதன் மூலமே இதை எளிதாக சரி செய்யலாம். எப்படி என்பதை குறித்து பார்க்கலாம்?
1. தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடியை கலந்து இரவில் தலைக்கு தேய்த்து விட்டு அடுத்த நாள் காலையில் குளிக்க வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்து வர நல்ல மாற்றம் ஏற்படும்.
2. தேங்காய் எண்ணெயில் செம்பருத்தி பூ மற்றும் இலைகளை அரைத்து தலைக்கு தேய்த்தால் முடி உதிர்வு, நரை முடி போன்ற பிரச்சனைகள் தீரும்.
3. தேங்காய் எண்ணெயில் மருதாணி இலைகளை போட்டு கொதிக்க வைத்து வெதுவெதுப்பான சூட்டில் குளிப்பதற்கு முன்பு 30 நிமிடம் தேய்த்து குளித்தால் பிரச்சனை உடனடியாக சரியாகும்.