For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சித்த மருத்துவம் : கடுமையான மூட்டு வலியை விரட்டும் மேஜிக் மில்க்.! எப்படி செய்யலாம்.!?

04:45 AM Feb 29, 2024 IST | 1newsnationuser5
சித்த மருத்துவம்   கடுமையான மூட்டு வலியை விரட்டும் மேஜிக் மில்க்   எப்படி செய்யலாம்
Advertisement

பொதுவாக அந்த காலத்தில் 60 வயதை கடந்த முதியோர்கள் கூட தற்போது வரை நல்ல ஆரோக்கியத்துடன், ஓடி ஆடி வேலை செய்கின்றனர். ஆனால் தற்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு 30 வயதை தாண்டி விட்டாலே மூட்டு வலி, கால் வலி, முதுகு வலி என எலும்புகளில் ஆரோக்கியம் இல்லாமல் பல நோய்களை சந்தித்து வருகின்றனர்.

Advertisement

இதற்கு துரித உணவுகளை அதிகமாக உண்பது, மன அழுத்தம் அதிகமாவது, அன்றாட பழக்கங்கள் சரி இல்லாதது போன்றவை தான் முக்கிய காரணமாக கூறப்பட்டு வருகிறது. எலும்புகளுக்கு கால்சியம் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். இந்த கால்சியம் நிறைந்த ஊட்டச்சத்துக்களை எடுத்து வந்தாலே எலும்புகளின் ஆரோக்கியம் பலப்படும். மேலும் சித்த வைத்தியத்தில் கூறப்பட்டுள்ள இந்த மருத்துவ குணம் கொண்ட பாலை தினமும் குடித்து வரலாம்?

தேவையான பொருட்கள்:-
கோதுமை - 2 ஸ்பூன், வேர்க்கடலை - 2 ஸ்பூன், ராகி - 1ஸ்பூன், கம்பு - 1 ஸ்பூன், பால், நாட்டு சர்க்கரை

முதலில் ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலை, கம்பு, ராகி, கோதுமை போன்றவற்றை எட்டு மணி நேரத்திற்கு ஊறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். எட்டு மணி நேரத்திற்கு பிறகு தண்ணீரை நன்றாக வடிகட்டி, இந்த தானியங்களை ஒரு துணியில் மடித்து முளை கட்டவைக்கவும். பின்பு முளைகட்டிய தானியங்களை நன்றாக அரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் பால் வைத்து நன்றாக கொதிக்க விட்டு அரைத்த கலவையை அதில் ஊற்றவும். இந்த கலவையும், பாலும் நன்றாக கொதித்த பின்பு இதனை அப்படியே குடித்து வந்தால் மூட்டு வலி, முதுகு வலி போன்ற எலும்புகளில் ஏற்படும் வலிகளை சரி செய்யும். தேவைப்படுபவர்கள் சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து குடித்து வரலாம்.

English summary : siddha remedies for cure bone pain

Read more : 100 சதவீதம் கண் பார்வையை அதிகரிக்க வைக்கும் மேஜிக் மூலிகை பால்.? எப்படி செய்யலாம்.!?

Advertisement