முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுதலை பெற இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்.!?

08:25 AM Feb 14, 2024 IST | 1newsnationuser5
Advertisement

நவீன காலத்தின் ஓட்டத்தினால் துரித உணவுகளாலும், முறையான உடற்பயிற்சி இல்லாமையாலும் நமது உடலில் மலச்சிக்கல் ஏற்படுகிறது. மலச்சிக்கல் பெரும்பாலும் உணவு மற்றும் வாழ்வியல் முறைகளால் சரி செய்யக்கூடியதாகும். மலச்சிக்கலுக்கு முதன்மையான காரணம் நார்சத்து குறைபாடு தான். அவ்வாறே நார்சத்து குறைபாட்டை நீக்குவதற்கு நாம் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். குறிப்பாக தானியங்கள், பழங்கள் போன்றவற்றை முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

Advertisement

கால ஓட்டத்தின் வேகத்தில் நேரமின்மையால் நாம் பழங்களை ஜூஸாக எடுத்துக் கொள்கிறோம். ஆனால் அதில் உள்ள பெரிய தீமை அந்த பழத்தின் உள்ள நார்ச்சத்து முழுமையாக நமக்கு கிடைக்காமல் போய்விடும். அதனால் பழங்களை முழுமையாக உண்ண வேண்டும். மேலும் போதுமான அளவு நமது உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள நீர் அதிகமாக அருந்த வேண்டும்

குறிப்பாக கோடை காலங்களில் மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நீர்ச்சத்து குறைபாடாகும். இதை சரிசெய்வதற்கு நீர் சத்து நிறைந்த பழங்களான தர்பூசணி, முலாம்பழம், ஆரஞ்சு, ஆப்பிள், போன்ற பழங்களை முழுமையாக உண்ண வேண்டும். மேலும் எண்ணெயில் பொரித்த மற்றும் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். செரிமான மண்டலத்துடன் தொடர்புடையதாக மலச்சிக்கல் பிரச்சனை இருந்து வருவதால் எளிதாக ஜீரணமாக கூடிய உணவுகளை உண்ண வேண்டும்.

குறிப்பாக சியா விதையில் கொழுப்பு சத்தும், நார்ச்சத்தும் நிறைந்துள்ளதால் இது மலச்சிக்கல் பிரச்சனையை உடனடியாக குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு அன்றாடம் உணவு முறைகளில் ஒரு சில உணவுகளை சேர்த்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையை எளிதாக மருந்துகள் இல்லாமலே குணப்படுத்தலாம். மலச்சிக்கல் பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விட்டால் இது மூல நோய்க்கு வழிவகை செய்யும் என்ற மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags :
constipationfoodshealthy
Advertisement
Next Article