முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரூ.6000 நிவாரணம்!… முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்!

06:47 AM Dec 17, 2023 IST | 1newsnationuser3
Advertisement

மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ரூ.6000 நிவாரணம் வழங்கும் பணியை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

Advertisement

தமிழ்நாட்டில் கடந்த 3 மற்றும் 4ம் தேதி வீசிய ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் அதிகனமழை பெய்தது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் குறிப்பிட்ட சில வட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த 4 மாவட்டங்களில் யாருக்கெல்லாம் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் கடந்த மூன்று நாட்களாக டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள், நேரத்திற்கு அவர்கள் வழக்கமாக பொருட்கள் வாங்கும் ரேஷன் கடைகளுக்கு சென்று, ரூ.6,000 நிவாரண தொகை பெறலாம். கைரேகை (பயோமெட்ரிக்) வைத்து, உறுதி செய்யப்பட்ட பிறகே பணம் வழங்கப்படும். இந்த 4 மாவட்டங்களிலும் சுமார் 37 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதற்காக டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிவாரண தொகையான ரூ.6,000 உதவித்தொகையை இன்று (17ம் தேதி) முதல் 22ம் தேதி (வெள்ளி) வரை ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹6,000 நிவாரணம் வழங்கும் பணியை இன்று காலை 10 மணிக்கு சென்னை, வேளச்சேரி அஷ்டலட்சுமி நகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க, டோக்கனில் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்கு வந்து பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

Tags :
cm stalinRelief of Rs.6000இன்று தொடங்கிவைக்கிறார்மிக்ஜாம் புயல்முதல்வர் ஸ்டாலின்ரூ.6000 நிவாரணம்
Advertisement
Next Article