முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கவனம்...! நாளை முதல் ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் 200 பேருக்கு மட்டுமே நிவாரண நிதி வழங்கப்படும்...!

11:27 AM Dec 17, 2023 IST | 1newsnationuser2
Advertisement

நாள் ஒன்றுக்கு ரேஷன் கடைகளில் 200 பேருக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணத் தொகையாக ரூ.6000 வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்க ஏதுவாக டோக்கன்கள் வீடுவீடாக சென்று விநியோகிக்கப்பட்டு வருகிறது. டோக்கன்கள் கிடைக்கப்பெற்றவர்கள், அதில் குறிப்பிட்ட தேதியிலும், நேரத்திலும், குறிப்பிட்டுள்ள நியாய விலைக் கடைக்கு சென்று ரூ.6000 பெற்றுக்கொள்ளளாம்.

Advertisement

டோக்கன்கள் கிடைக்கப்பெறாத மற்றும் குடும்ப அட்டை இல்லாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நியாய விலைக் கடைகளில், அதற்கென உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை, வேளச்சேரி, அஷ்டலட்சுமி நகரில் உள்ள நியாய விலைக் கடையில் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000/- நிவாரணத் தொகை வழங்கி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மற்ற நியாய விலைக் கடைகளில் காலை 10.15 மணிக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அடுத்து வரும் நாட்களில், நியாய விலைக் கடைகளில் முற்பகல் 9.00 மணி முதல் 1.00 மணி வரையும், பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரையும் நிவாரணத்தொகை மற்றும் படிவம் வழங்கப்படும். ரேஷனில் கடைகளில் 200 பேருக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் நாளை முதல் ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் 200 பேருக்கு நிவாரண நிதி வழங்கப்படும். பொதுமக்கள் நிவாரணத் தொகை குறித்த தங்களது சந்தேகங்களை 044-2859 2828 மற்றும் 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் வாயிலாகவும் தொடர்பு கொண்டு கேட்டறியலாம் என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

Tags :
rationrelief fundtn government
Advertisement
Next Article