For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்பட்டவர்களுக்கு நிவாரணம்..!! உச்சநீதிமன்றத்தில் வழக்கு..!!

10:18 AM May 02, 2024 IST | Chella
கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்பட்டவர்களுக்கு நிவாரணம்     உச்சநீதிமன்றத்தில் வழக்கு
Advertisement

உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகளில் கோவிஷீல்டு முக்கியமானது. இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் உருவாக்கிய இந்த தடுப்பூசி உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவிலும் இந்த தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் விநியோகித்தது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் கோடிக்கணக்கானோர் போட்டுக்கொண்டனர்.

Advertisement

இந்த கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவை ஏற்படுத்தும் என அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. அதாவது, அரிதான சந்தர்ப்பங்களில் ரத்தம் உறைதல் மற்றும் அது தொடர்பான விளைவுகளை உருவாக்கும் என இங்கிலாந்து நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இது உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள் பெரும் அச்சத்தில் உறைந்து உள்ளனர். இந்த மருந்தை இந்தியாவில் அனுமதித்ததற்காக மத்திய அரசை பல்வேறு தரப்பினரும் சாடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தற்போது உச்சநீதிமன்றத்தை எட்டியுள்ளது. இது தொடர்பாக விஷால் திவாரி என்ற வழக்கறிஞர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், கோவிஷீல்டு தடுப்பூசியை பரிசோதிக்கவும், அதன் பக்க விளைவுகள் மற்றும் அபாய காரணிகளை ஆய்வு செய்யவும் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், எந்த தனிநபரும் அல்லது நிறுவனமும் இந்த தடுப்பூசி விற்பனை மற்றும் விநியோகம் செய்வதற்கு தடை விதிக்கும் வகையில் கடுமையான சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதைப்போல இந்த தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறும் மனுதாரர் தனது மனுவில் கூறியுள்ளார். அனைத்து தரப்பினரிடமும் கவனத்தை ஈர்த்துள்ள இந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்துள்ள உங்களுக்கு செம குட் நியூஸ்..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!

Advertisement