முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'முடங்கியது ரிலையன்ஸ் ஜியோ இணைய சேவை' பயனர்கள் அவதி!!

Reliance Jio users across India today are reporting significant disruptions in their internet services.
04:25 PM Jun 18, 2024 IST | Mari Thangam
Advertisement

இந்தியா முழுவதும் உள்ள ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் இன்று தங்கள் இணைய சேவைகளில் குறிப்பிடத்தக்க இடையூறுகளை அனுபவித்ததாக புகார்களை தெரிவித்து வருகின்றனர். இதனால், வாட்ஸ்அப், ஸ்னாப்சாட், யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் கூகுள் போன்ற பிரபலமான இணையதளங்கள், ஆப்ஸ்களை அணுக முடியவில்லை என பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

டவுன்டெக்டரின் அறிக்கையின்படி படி, 55% சதிவேதம் பேர் ஜியோ ஃபைபர் மூலமாகவும், 40% சதவீதம் பேர் ஜியோ இன்டர்நெட் மூலமாகவும், 6% சதவீதம் பேர் மொபைல் மூலமாகவும் இந்த சிக்கலை சந்தித்துள்ளனர். இந்த சேவைகளுக்கு வெளிப்படையான இடையூறுகள் இருந்தபோதிலும், செயலிழப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை ஜியோ இன்னும் வெளியிடவில்லை. ஜியோ சேவை முடங்கியுள்ளதால் அதன் பயனர்கள் பலர் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். சில சமூக ஊடக பயனர்களும் மீம்ஸ்களைப் பகிர்ந்து ஜியோவை கேலி செய்து வருகின்றனர்.

ஒரு பயனர் விரக்தியை வெளிப்படுத்தி, "கூகுள், ஸ்விக்கி மற்றும் முக்கிய இணையதளங்களில் ஜியோ நெட்வொர்க் செயலிழந்துள்ளது. அதேசமயம், வாட்ஸ்அப், ஜியோவின் சொந்த பிளாட்ஃபார்ம்கள் சரியாக வேலை செய்வதாகத் தெரிவித்தார். மற்றொரு பயனர், ஜியோவின் வாடிக்கையாளர் சேவையில் இருந்து அக்கறை இல்லாததை சுட்டிக்காட்டினார்.

Read more ; ’கடன் வாங்கும்போது மட்டும் இனிக்குதா’..!! ’திரும்ப தர மாட்டியா’..? தொழிலதிபரை காரில் கடத்திச் சென்ற கும்பல்..!!

Tags :
jio downnetwork
Advertisement
Next Article