Reliance Jio down: நாடு முழுவதும் ஜியோ இணைய சேவை முடக்கம்..! பயனர்கள் அவதி..!
Reliance Jio down: இந்தியாவின் முன்னணி தொலை தொடர்பு சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இணைய சேவை முடங்கியதால், அதன் பயனர்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் ஜியோ பயனர்கள் இடையூறுகளை அனுபவித்ததாக புகார்களை தெரிவித்து வருகின்றனர். ஜியோ இணைய சேவை முடங்கியதால், வாட்ஸ்அப், ஸ்னாப்சாட், யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் கூகுள் போன்ற பிரபலமான இணையதளங்கள், ஆப்ஸ்களை அணுக முடியவில்லை என பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
டவுன்டெக்டரின் அறிக்கையின்படி படி, 55% சதிவேதம் பேர் ஜியோ ஃபைபர் மூலமாகவும், 40% சதவீதம் பேர் ஜியோ இன்டர்நெட் மூலமாகவும், 6% சதவீதம் பேர் மொபைல் மூலமாகவும் இந்த சிக்கலை சந்தித்துள்ளனர். இந்த சேவைகளுக்கு வெளிப்படையான இடையூறுகள் இருந்தபோதிலும், செயலிழப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை ஜியோ இன்னும் வெளியிடவில்லை. ஜியோ சேவை முடங்கியுள்ளதால் அதன் பயனர்கள் பலர் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். சில சமூக ஊடக பயனர்களும் மீம்ஸ்களைப் பகிர்ந்து ஜியோவை கேலி செய்தும் வருகின்றனர்.
ஜியோ மொபைல் இணைய சேவை மட்டுமின்றி ஜியோ ஃபைபர் நெட் சேவையும் மொத்தமாக முடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ நிறுவனத்தின் இணைய சேவை பாதிப்பால், வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி, மும்பை, சென்னை, ஐதராபாத் ஆகிய நகரங்களில் அதிகப்படியான புகார்களை தெரிவிக்கப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.