100 GB வரை இலவச Storage.. ஜியோ பயனர்களுக்கு அதிரடி சலுகை..!! - முகேஷ் அம்பானி அறிவிப்பு
ஜியோ ஏஐ கிளவுட் அறிமுக சலுகையாக 100 ஜிபி வரை இலவச கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும் என்று ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
Reliance jio இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) அதன் 47வது ஆண்டு பொதுக் கூட்டத்தை AGM 2024) இன்று ஆகஸ்ட் 29 அன்று நடத்தி அதில் பல அறிவிப்புகளை வெளியிட்டது. நிகழ்வின் போது, RIL தலைவர் முகேஷ் அம்பானி பங்குதாரர்களிடம் உரையாற்றினார் மற்றும் நிறுவனத்தின் பவர் மற்றும் என்டர்டைமென்ட் உள்ளிட்ட பல்வேறு பிஸ்னஸ்களுக்கான தனது கருத்தை பகிர்ந்து கொண்டார். ரிலையன்ஸ் பிஸ்னஸ்களுக்கு AI-நேட்டிவ் டிஜிட்டல் உள்கட்டமைப்பை அமைப்பதையும் அவர் எடுத்துரைத்தார்.
அவர் பேசுகையில், உலக அளவில் இந்தியாவுக்கான மரியாதை உயர்ந்துள்ளதாக குறிப்பிட்ட முகேஷ் அம்பானி, உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயரும் என நம்பிக்கை தெரிவித்தார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளுக்கான போனஸ் குறித்து செப்டம்பர் 5-ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வெற்றிகரமான மாற்றம் வரப்போகிறது என கூறிய முகேஷ் அம்பானி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஜியோ ப்ரைன்(Brain) தொழில்நுட்பம் விரைவில் அறிமுக செய்யப்பட இருப்பதாக அறிவித்தார். மேலும், ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு 100 ஜிபி இலவச கிளவுட் சேமிப்பகத்தை வழங்கும்"ஜியோ ஏஐ கிளவுட்" திட்டத்தை முகேஷ் அம்பானி தொடங்கிவைத்தார்.
புதிய JioTV+ சலுகைகள்
JioTV+ இல் புதியது என்ன என்பதைப் பற்றி ஆகாஷ் அம்பானி கூறினார், "JioTV+ உங்களின் அனைத்து பொழுதுபோக்கு-நேரடி டிவி, தேவைக்கேற்ப நிகழ்ச்சிகள் மற்றும் பயன்பாடுகள் அனைத்தையும் ஒரு சுலபமாக பயன்படுத்தக்கூடிய தளத்தில் கொண்டு வருகிறது. JioTV+ மூலம், 860 க்கும் மேற்பட்ட நேரடி டிவிக்கான அணுகலைப் பெறுவீர்கள். அனைத்து முன்னணி சேனல்களும், பிரமிக்க வைக்கும் உயர் வரையறை, அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ மற்றும் ஹாட்ஸ்டார் போன்ற ஆப்ஸின் சிறந்த உள்ளடக்கம்-அனைத்தும் அதிவேக சேனல் மாறுதல் அனுபவத்திற்காக JioTV+ ஐ மேம்படுத்தியுள்ளோம்.
Read more ; கோவிட்-19 நோய்த்தொற்று இதய பாதிப்பை ஏற்படுத்தும்..!! – ஆய்வில் தகவல்