கட்டடங்களுக்கான புதிய வழிகாட்டி மதிப்புகள் வெளியீடு..!! கட்டணங்கள் எல்லாம் மாறிப்போச்சு..!! பத்திரப்பதிவுத்துறை அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் சொத்து பரிமாற்ற ஆவணங்களை பதிவு செய்ய மொத்தம் 575 சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. சமீப காலமாக போலி பத்திரங்கள் தொடர்பான புகார்கள் அதிகளவில் பதிவாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். போலி பத்திரங்கள் மூலம் எளியவர்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான பல இடங்களை சிலர் அபகரித்து வருகின்றனர். அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கட்டடங்களுக்கான புதிய வழிகாட்டி மதிப்புகளை வகைப்படுத்தி, பட்டியல் வடிவில், சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பதிவுத்துறை அனுப்பிய விவரங்கள்...
* பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்புகளில், தரைதளத்தில், 10.7 சதுர அடிக்கு 11,515 ரூபாயும், முதல் தளம் 10,535 ரூபாயும், இரண்டாம் தளம் 10,695 ரூபாயும், 3-வது தளம் 10,870 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
* மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் 10.7 சதுர அடிக்கு தரைதளத்திற்கு 12,667 ரூபாயும், முதல் தளத்திற்கு 11,589 ரூபாயும், இரண்டாம் தளத்திற்கு 11,765 ரூபாயும், 3-வது தளத்திற்கு 11,957 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒவ்வொரு கூடுதல் தளத்திற்கும் 10.7 சதுர அடிக்கு 163.30 ரூபாய் என்ற அடிப்படையில் மதிப்பு உயரும். இதேபோல், கட்டுமான பொருட்களின் அடிப்படையில், கட்டடங்களுக்கான பல்வேறு நிலை மதிப்புகளையும் பதிவுத்துறை பட்டியலிட்டுள்ளது.
Read More : 2026இல் CM..!! போட்டியிடும் தொகுதியை உறுதி செய்த விஜய்..? அனல் பறக்கும் அரசியல் களம்..!!