’ஒரே நேரத்தில் பலருடன் உறவு’..!! ’காமத்தை அடக்க முடியாத மாணிக்கவாசகர்’..!! மகாவிஷ்ணுவின் மறுபக்கம்..!!
கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறார் ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு. அரசுப் பள்ளிகளுக்கு சென்று மாணவிகளிடம் சொற்பொழிவாற்றுகிறேன் என்ற பெயரில் மூட நம்பிக்கையையும், பிற்போக்குத்தனங்களையும் விதைத்து வருவதாக மகாவிஷ்ணு மீது குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கிறது.
இதற்கிடையே, யார் இந்த மகாவிஷ்ணு என வலைத்தளங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வந்தது. இந்த வேட்டையில் அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’அசத்தப்போவது யாரு’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக வந்தவர்தான் தற்போது ஆன்மீக சொற்பொழிவாற்றும் மகாவிஷ்ணு. மதுரை மகா என்ற பெயரில் அன்றைக்கு நகைச்சுவைகளை அள்ளி வீசியவர் தற்போது, பள்ளி-கல்லூரி ஆன்மிக கூட்டங்களிலும், யூடியூப் வாயிலாகவும் சொற்பொழிவாற்றி வருகிறார்.
மெய் ஞானத்தை போதிப்பதாய் கூறும் மகாவிஷ்ணு, ஒரே நேரத்தில் பலருடன் உறவு கொள்வது குறித்தும், விஜய்-அஜித் படத்தின் வெளியீட்டின்போது அதற்கு ரிவ்யூவ் கொடுப்பதுமாய் விதை பட வெளியீட்டின் போது அதற்கு ரிவ்யூ ஒழிப்பதுமாய் இவ்வாறான வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். திருவாசகத்தை எழுதிய மாணிக்கவாசகரை இறுதி காலம் வரையிலும் காமத்தை அடக்க முடியாமல் தவித்ததாக கூறியிருப்பது கூடுதல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மகாவிஷ்ணு சொற்பொழிவாற்றுவதோடு தன் பணியை நிறுத்திவிடவில்லை. இவையெல்லாம் அவருக்கு இரண்டாம் பட்சம் தான். கடந்த 2021ஆம் ஆண்டு திருப்பூரில் பரம்பொருள் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை தொடங்கி நடத்தி வந்தவர், சில மருந்து லேகியங்களையும் விற்பனை செய்து வருகிறார். இவர், இந்தியா மட்டுமின்றி இலங்கை, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று மனச்சோர்வை போக்கும் சிறப்பு வகுப்புகளையும் எடுத்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியை சந்தித்த மகாவிஷ்ணு, பள்ளி பாடநூல்களில் வள்ளலார் இயற்றிய திருவருட்பாவை சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து மனு அளித்தார். இதே கோரிக்கை மனுவை அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மனோ தங்கராஜ் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி ஆகியோரிடம் நேரில் வழங்கினார்.
அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி சர்ச்சையையும், அதே நேரம் மகாவிஷ்ணுவின் பழைய கதைகள் தோண்டப்பட்டு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாண்ட் காமெடியனாக இருந்தவர் இவ்வளவு குறுகிய காலத்தில் இப்படி ஒரு நிலையை அடைந்துவிட்டாரா என்ற வியப்பும் ஏற்பட்டுள்ளது. அதே நேரம் பள்ளிக்கு வரும் யூடியூபர்களுக்கு மாணவ மாணவிகள் ராணுவ வீரர்களை போல் வரவேற்பு அளிப்பதும், ஆசிரியர்கள் ராஜ மரியாதையுடன் வரவேற்ற காட்சிகளை நோட்டமிட்ட நெட்டிசன்கள், பிறப்போக்குத்தனங்களை பரப்புவோர்களுக்கு ராஜ உபசரிப்பு கொடுப்பதா என்று கொதித்து போய் உள்ளனர்.
Read More : ’சித்தர்கள் தன்னிடம் சொன்னதைத்தான் மாணவர்கள் மத்தியில் பேசினேன்’..!! போலீசாரிடம் மகாவிஷ்ணு வாக்குமூலம்..!!