For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அஜித் மச்சினனுடன் உறவு..!! தன்னைவிட 4 வயது குறைவானவருடன் ஷகீலா செய்த சம்பவம்..!! பகீர் தகவல்..!!

01:16 PM Jan 10, 2024 IST | 1newsnationuser6
அஜித் மச்சினனுடன் உறவு     தன்னைவிட 4 வயது குறைவானவருடன் ஷகீலா செய்த சம்பவம்     பகீர் தகவல்
Advertisement

தமிழில் கடந்த 1994ஆம் ஆண்டு 'ப்ளே கேர்ள்ஸ்' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷகீலா. இந்த படத்தில் சில்க் ஸ்மிதா ஹீரோயினாக நடித்திருந்த நிலையில், ஷகிலா அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே, மிகவும் போல்டான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து, ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.

Advertisement

கவர்ச்சி நடிகை என்கிற இமேஜை உடைத்து, ஷகிலாவின் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது என்றால், அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சி மூலம், நடிக்க மட்டுமல்ல, சூப்பராக சமைக்கவும் முடியும் என்பதை நிரூபித்தார். பின்னர், அடுத்தடுத்து பல மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் சகிலா, பிக்பாஸ் சீசன் 7 தெலுங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 14-வது நாளில் வெளியேறினார்.

மேலும், யூடியூப் தளங்களில், பிரபலங்களை பேட்டி எடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார். இதன் மூலமே இவருக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக கிடைப்பதாக கூறப்படுகிறது. தன்னுடைய 10 வயதில் சுரேஷ் ரெட்டி என்பவரை காதலித்ததாகவும், அவரை காதலிக்கும் போதே பள்ளியில் படித்த மாணவர் ஒருவரையும் காதலித்ததாகவும் தன்னுடைய பப்பி லவ் பற்றியும், அடல்ட் வயதில் காதலித்த லவ் குறித்தும் பேசியுள்ளார்.

அந்த வகையில், அஜித்தின் மச்சினன் ரிஷியுடனான காதல் குறித்து முதல் முறையாக பேசியுள்ளார். 15 வயதில் தனக்கும், ரிஷிக்கும் இடையே நட்பு ஏற்பட்டதாகவும், காலப்போக்கில் அது காதலாக மலர்ந்ததாகவும், எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற முடிவில் இருந்தோம் ஆனால், அப்படி ஒரு வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது. இருப்பினும், தற்போது வரை இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார். ரிஷி ஷகிலாவை விட நான்கு வயது சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement