”ரெக்க கட்டி பறக்குதய்யா அண்ணாமலை சைக்கிள்”..!!ஜி.கே.வாசன் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு..!!
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் சைக்கிள் சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், வரும் மக்களவை தேர்தலில் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி கடந்த 6ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்தார். மேலும், தங்களது கோரிக்கைகள் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை போல இந்த தேர்தலுக்கும் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். மேலும், தமிழ் மாநில காங்கிரசின் மனு பரிசீலிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கியுள்ளது.
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடுகிறது. முன்னதாக, பாஜக கூட்டணியில் உள்ள டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. பாஜக கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகளுக்கும் கேட்ட சின்னம் கிடைத்துள்ளது. ஆனால், நாம் தமிழர் கட்சி நீண்ட நாட்களாக கரும்பு விவசாயி சின்னத்திற்கு போராடி வருகின்றனர்.
Read More : Electoral Bonds | தேர்தல் பத்திரம்..!! எந்த கட்சிக்கு யாரெல்லாம் நன்கொடை..!! இனி ஈசியா பார்க்கலாம்..!!