முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’டிசம்பர் 5ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்’..!! அரசுப் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

12:30 PM Dec 01, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் 6,029 அரசுப் பள்ளிகளின் மிஷன் இயற்கை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் இத்திட்டம் கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3,700-க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றன. இதில் 3,000 பள்ளிகளில் பசுமை அமைச்சரவைகள் அமைக்கப்பட்டது.

Advertisement

இதன் மூலம் அதில் உள்ள பள்ளி மாணவர்கள், வீடுகள் மற்றும் சமூக சுற்றுச்சூழலை சீராக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டனர். அதில் பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் மிஷன் இயற்கை சுற்றுச்சூழல் திட்டத்தை உயர் தொழில்நுட்ப ஆய்வக வசதி கொண்ட சுமார் 6,029 அரசு பள்ளிகளில் செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பங்கேற்பதற்கு உயர்தொளி நுட்ப ஆய்வக வசதி உள்ள தங்களுடைய பள்ளிகளின் பெயர்களை சுற்றுச்சூழல் ஆசிரியர்களின் பெயர்களுடன் இணையதள முகவரியில் டிசம்பர் 5ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tags :
பள்ளிக்கல்வித்துறைமாணவர்கள்மிஷன் இயற்கை திட்டம்
Advertisement
Next Article