Registration | காலி மனை வாங்குவோர் கவனத்திற்கு..!! அதிரடியாக வந்த மாற்றம்..!! பத்திரப்பதிவுத்துறை வெளியிட்ட அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் நகரங்கள், புறநகர் பகுதிகளில் நிறைய பேர் காலி மனைகளை வாங்கி போட்டுள்ளனர். இதற்காக சொத்து வரி விதிக்கப்படுகிறது. ஆனால், கட்டிடங்கள் எதுவும் கட்டாமல், வெறுமனே காலியாக உள்ள மனைகளுக்கு சொத்து வரி விதிக்கவும் முடியாது. வசூலிக்கவும் முடியாது. எனவே, அதனால், நகர்ப்புற பகுதிகளில் மட்டும் காலி மனைகளுக்கு வரி விதிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. சொத்து வரியை போலவே, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் காலி மனைக்கான ஓனர்கள் வரி செலுத்த வேண்டும். ஆனால், இந்த வரியை நிறைய பேர் கட்டுவதில்லை. வெறும் காலி மனைக்கான வரியை மட்டுமே செலுத்துகின்றனர். மேலும், இதுகுறித்து நிறைய புகார்களும் வந்ததால், இந்த விவகாரத்தில் நகராட்சி நிர்வாகத்துறை கிடுக்கிப்பிடி உத்தரவு போட்டுள்ளது.
முக்கியமாக, மனைப்பிரிவு அங்கீகாரம், அப்பார்ட்மென்ட்கள், வணிக வளாக கட்டிடங்கள் போன்றவற்றின் கட்டுமானங்களுக்கு அனுமதி கோரி உள்ளூர் திட்ட குழுமத்திற்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்வார்கள். அப்படி விண்ணப்பிப்பவர்களுக்கு தான் இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை வெளியிட்ட அந்த அறிவிப்பில், "தமிழ்நாடு முழுவதும் காலி மனைகளாக இருந்தால் அவற்றுக்கும் வரிவிதிப்பு செய்யப்பட வேண்டும். தமிழ்நாட்டில் பெரும்பாலான மாநகராட்சிகளின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காலி மனைகளுக்கு வரி விதிக்காமல் நிதி இழப்பு ஏற்படுவது தெரியவருகிறது. எனவே, காலி மனை வரி விதிப்பு செய்ய பல்வேறு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
உள்ளூர் திட்டக்குழுமத்தில் விண்ணப்பிக்கும் போது, நிலத்தின் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் அளவீடு செய்து காலி மனை வரி விதிக்கக் கூடாது. நில உரிமைதாரருக்கு சொந்தமாக உள்ள மொத்த நிலப்பரப்புக்கும், காலி நிலவரி விதிக்கப்பட வேண்டும். விதிகளின்படி காலியிட வரிவிதிப்பு செய்த பின்னரே உள்ளூர் திட்டக் குழுமத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கட்டிட உரிமத்தை நீட்டிப்பு செய்யக்கோரும் விண்ணப்பதாரர்களும் தங்களுக்கான காலியிடங்களுக்கு உரிய வரியை முழுமையாக செலுத்தியிருக்க வேண்டும்.
Read More : பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் MLA சரஸ்வதி..? அனல் பறக்கும் அரசியல் களம்..!!
அத்தகைய கட்டிடங்களுக்கு மட்டுமே உரிமை நீட்டிப்புக்கான பரிந்துரையை உள்ளூர் திட்டக் குழுமம் வழங்க வேண்டும். மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காலி மனைகளை பத்திரம் செய்ய பலரும் விண்ணப்பிப்பார்கள். அவ்வாறு வந்தால் காலி மனை வரிவிதிப்பு செய்த ரசீது பெற்ற பிறகே, பத்திரங்களை பதிவு செய்து அளிக்க வேண்டும். இது தொடர்பாக பதிவுத்துறை அலுவலகங்களுக்கு உரிய அறிவிப்பு வழங்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.