முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Registration | அசத்தும் பத்திரப்பதிவுத்துறை..!! ரூ.16,653.32 கோடி வருவாய்..!! புதிய சாதனை..!!

11:35 AM Mar 04, 2024 IST | 1newsnationuser6
Advertisement

பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், பல்வேறு அறிவிப்புகளையும், சலுகைகளையும் பத்திரப்பதிவு வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், ஒரு மகிழ்ச்சி செய்தியை பதிவுத்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு அரசின் மற்ற துறைகளை போலவே பத்திரப்பதிவு துறையும் முழுக்க முழுக்க ஆன்லைன் மயமாகிவிட்டது. அதேபோல, ஒவ்வொரு ஆண்டும் வருவாய் இலக்கு நிர்ணயித்து, பத்திரப்பதிவு துறை செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த வருடம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ ரூ.25,000 கோடி வருவாய் ஆகும். இதை மையப்படுத்திதான், இந்த இலக்கை எட்டி பத்திரப்பதிவு பயணப்பட்டு வருகிறது.

இதற்காகவே, பல்வேறு அதிரடிகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. இதில் ஒருபகுதியாக, சுபமுகூர்த்த தினங்களில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றன. இந்த நாட்களில் மட்டும், பத்திரப்பதிவு சற்று அதிகமாகவே நடக்கும் என்பதால், கூடுதல் வசூல் கிடைத்தும் வருகிறது. இதைத்தவிர, மேலும் சில விடுமுறை நாட்களிலும் கூடுதல் பத்திரப்பதிவை மேற்கொள்ள மக்கள் கோரிக்கை விடுத்து வந்ததால், அதற்கேற்றபடியும் விசேஷ டோக்கன்கள் கூடுதலாக விநியோகிக்கப்படுகின்றன.

இனி வரும் காலங்களிலும், இலக்கை எட்டிப்பிடிக்க பதிவுத்துறை மும்முரமாகி வருகிறது. அதுமட்டுமின்றி, பதிவுக்கு வரும் பொதுமக்களின் பணிகளை சிறப்பாக செய்து, புகாருக்கு இடமின்றி அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் பணிபுரிய வேண்டும் என்றும் அரசு நிர்ணயித்த வருவாய் இலக்கை அடைய வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பதிவுத்துறை வருவாய் வளர்ச்சியில் மீண்டும் ஒரு புதிய வரலாற்று சாதனை படைத்திருக்கிறது.

கடந்த ஆண்டைவிட இந்த வருடம் பிப்ரவரி வரை, 1,171.60 கோடி ரூபாய் அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலர் ஜோதிநிர்மலா சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”நடப்பு நிதியாண்டில், கடந்த பிப்ரவரி மாதம் மட்டும், பதிவுத்துறை 1,812.69 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. கடந்த நிதியாண்டில், 2023 பிப்ரவரியில் 1,593.95 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது. அதைவிட, இந்தாண்டு 218.74 கோடி ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் கடந்த மாதம் வரை, 16,653.32 கோடி ரூபாய், பதிவுத்துறையால் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது, கடந்தாண்டு பிப்ரவரி வரை அடைந்த வருவாயான, 15,481.72 கோடி ரூபாயை விட, 7.57 சதவீதம், அதாவது 1,171.60 கோடி ரூபாய் கூடுதலாகும். 'ஜியோ கோஆர்டினேட்ஸ்' உடன் கூடிய புகைப்படத்தை, கிரைய ஆவணத்துடன் இணைத்து, ஆவணப்பதிவு செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், கட்டிட மதிப்புக்கான முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்துவதை தவிர்க்கும் நோக்கில் கட்டடங்களை மறைத்து, ஆவணம் பதிவு செய்வது தடுக்கப்பட்டுள்ளது.

இதனால், கட்டிடங்களின் மதிப்புக்கு உரிய முத்திரை தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் அரசுக்கு செலுத்தப்படுவது உறுதியாகியுள்ளது. முதலீடுகளின் வளர்ச்சி, தனி நபர் வருவாய் பெருக்கம் போன்றவையால், பதிவுத்துறையில் இதை விட கூடுதல் வருவாய் இந்த நிதியாண்டில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த டிசம்பரில், சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, மனைகளின் விற்பனை பாதிக்கப்பட்டது. வெள்ள நீர் ஒரு சில நாட்களில் வடிந்தபோதிலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மனைகளை வாங்க மக்கள் தயங்குவதால், மனைகளின் ஆவணப்பதிவு குறைந்துள்ளது. இதனால், கூடுதலாக எதிர்பார்க்கப்பட்ட வருவாய் வராமல் போனது.

இந்நிலையிலும், பதிவுத்துறை கடந்தாண்டில் பிப்வரி மாதம் வரை ஈட்டிய, 15,481.72 கோடி ரூபாயை விட கூடுதலாக, 1,171.60 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது. இதுவரை எய்தப்பட்ட அதிக வசூல் சாதனையாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : Darling | ’பெண்களின் சம்மதம் இன்றி ”டார்லிங்” என அழைத்தால் அது குற்றம்தான்’..!! நீதிமன்றம் அதிரடி..!!

Advertisement
Next Article