பரபரப்பு தீர்ப்பு: "உடலுறவுக்கு 'நோ' சொல்வதும் வன்கொடுமை தான்.." உயர் நீதிமன்றம் அதிரடி.!
மத்தியபிரதேச மாநிலத்தில் மனைவி வேண்டுமென்றே தாம்பத்திய உறவை தவிர்த்ததால் அவரது கணவர் தொடர்ந்த வழக்கில் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வெளியிட்டு இருக்கிறது. மேலும் தாம்பத்திய உறவை வேண்டுமென்றே தவிர்ப்பதும் வன்கொடுமை தான் என அந்த தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது..
மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் தம்பதிக்கு 2006 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவர் வெளிநாட்டுக்கு பயணம் செய்ய வேண்டி இருந்ததால் மனைவி அவருடனான தாம்பத்திய உறவை தவிர்த்து வந்திருக்கிறார். இது தொடர்பாக அவரது கணவர் விவாகரத்து வேண்டி மத்தியபிரதேச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் கணவரின் விவாகரத்தை மறுத்த நீதிமன்றம் அவரது வழக்கையும் தள்ளுபடி செய்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக பாதிக்கப்பட்ட கணவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கை மறு விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்றம் அந்த தம்பதியினருக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது. மேலும் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்விற்கு தாம்பத்திய உறவு அத்தியாவசியமானது என்றும் அதனை வேண்டுமென்றே ஒருவர் மறுப்பது வன்கொடுமை குற்றம் எனவும் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. மேலும் கணவன் மனைவி உறவில் காரணம் இன்றி தாம்பத்தியத்திற்கு மறுப்பு தெரிவிப்பது மனதளவில் கொடுமைப்படுத்துவதற்கு சமம் எனவும் தெரிவித்துள்ளனர்.