முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஜூலை 15-ம் தேதி முதல்... உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்...!

Refrigerators and LED lights can be applied to the product.
06:50 PM Jul 12, 2024 IST | Vignesh
Advertisement

குளிர்சாதனப் பெட்டிகள் , எல்இடி விளக்குகள் தயாரிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Advertisement

உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்திற்கான விருப்பம் அதிகரித்திருப்பதையடுத்து, இந்தத் திட்டத்தின் கீழ், குளிர்சாதனப் பெட்டிகள் எல்இடி விளக்குகள் தயாரிப்புக்கு, விண்ணப்பிக்கும் சாளரத்தை அரசு மீண்டும் திறந்துள்ளது. இந்தப் பொருட்களுக்கான சந்தை அதிகரிப்பு இதற்குக் காரணமாகும். 16.4.2021 அன்று அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் விதிமுறைகள், நிபந்தனைகளுக்கு உட்பட்டும் 04.06.2021 அன்று வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள், அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு ஏற்பவும், இந்த விண்ணப்பச் சாளரம் திறக்கப்பட்டுள்ளது.

உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்திற்கான விண்ணப்ப இணையதளம் 2024 ஜூலை 15 முதல் 2024 அக்டாபர் 12 வரை https://pliwhitegoods.ifciltd.com/ என்ற இணையதளத்தில் திறந்திருக்கும். விண்ணப்ப இணையதளம் மூடப்பட்டதற்கு பிந்தைய விண்ணப்பம் எதுவும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. பாகுபாடு எதுவும் இல்லாமல் இருப்பதற்காக புதிய விண்ணப்பதாரர்களும் ஏற்கனவே இந்தத் திட்டத்தால் பயனடைந்து தற்போது புதிய துறைக்கு வரவிரும்பும் நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம். இது இந்தத் திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் பத்தி 5.6 என்பதில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

தொகுக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் https://pliwhitegoods.ifciltd.com/ and https://dpiit.gov.in/sites/default/files/Consolidated_Guidelines_PLIScheme_23October2023.pdf என்ற இணையதளத்தில் கிடைக்கும். உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், இதுவரை தெரிவு செய்யப்பட்ட 66 விண்ணப்பதாரர்கள் ரூ.6,962 கோடி முதலீடு செய்ய உறுதி அளித்துள்ளனர்.

குளிர்சாதனப் பெட்டிகள் தயாரிப்புக்கு டைக்கின், வோல்டாஸ், ஹிண்டால்கோ, பானாசோனிக், ப்ளூ ஸ்டார், எல்ஜி, லூக்காஸ் போன்ற நிறுவனங்களும் எல்இடி விளக்குகள் தயாரிப்புக்கு சூர்யா, ஓரியண்ட், கிராம்ப்டன் கிரீவ்ஸ் போன்ற நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளன. உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டம் 2021-22 நிதியாண்டிலிருந்து 2028-29 நிதியாண்டு வரை 7 ஆண்டு காலத்திற்கு ரூ.6,238 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

Tags :
central govtLED bulblightRefrigerators
Advertisement
Next Article