முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு இன்று ரெட் அலர்ட்..!! மக்களே பாதுகாப்பா இருங்க..!

02:19 PM Apr 22, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயின் உக்கிரம் அதிகரித்து வருவதால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Advertisement

தமிழ்நாட்டில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. காலையில் தொடங்கும் வெயிலின் தாக்கம், மாலை வரை நீடிக்கிறது. மதிய நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே உள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் முந்தைய கணிப்பில், ஏப்ரல்-ஜூன் இடையேயான காலகட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை காட்டிலும், அதிகரிக்கும் என்றும், தென் இந்திய பகுதிகள், மத்திய, வடமேற்கு இந்திய பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா வடக்கு, மத்தியப்பிரதேசம் கிழக்கும், உத்தரப்பிரதேசம் கிழக்கு, ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களில் வெப்ப அலை வீசும்.

இதனால், உடல்நலக்குறைவு ஏற்பட்ட வாய்ப்புள்ளது. எனவே, குழந்தைகள், முதியோர், உடல்நலம் பாதிக்கப்பட்டோர் வெயில் கடுமையாக இருக்கும் நேரங்களில் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More : BREAKING | பதிவான வாக்குகளை அறிவிப்பதில் குழப்பம் ஏன்..? முதல்முறையாக விளக்கம் கொடுத்த சத்யபிரதா சாஹூ..!!

Advertisement
Next Article