For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டிற்கு "ரெட் அலெர்ட்" இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

'Red Alert' India Meteorological Department official announcement for Tamil Nadu..!
05:32 PM Nov 20, 2024 IST | Kathir
தமிழ்நாட்டிற்கு  ரெட் அலெர்ட்  இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Advertisement

தமிழ்நாட்டிற்கு "ரெட் அலெர்ட்" எச்சரிக்கை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தென் தமிழகத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென் தமிழகத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், தமிழ்நாட்டிற்கு "ரெட் அலெர்ட் எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது "ரெட் அலெர்ட்" எச்சரிக்கை இந்தியா வானிலை ஆய்வு மையம் சார்பில் அதிகாரப்பூர்வமாக விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராமநாதபுர மாவட்டத்தில் அதிகளவு மழை பதிவாகியுள்ளது.

சிவப்பு எச்சரிக்கை என்பது இரண்டு காரனனக்ளுக்க விடுக்கப்படும். அதில் ஒன்று அதிகனமழை பெய்யக்கூடும் என்பதற்காகவும் மற்றொன்று நிர்வாக காரணங்களுக்காகவும் விடுக்கப்படும். நிர்வாக காரணங்கள் என்பது உடனடியாக அந்த பகுதியில் மழை தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதாகும்.

Read More: மனைவியை பிரிந்த ஏ.ஆர். ரஹ்மானின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? சாய்ராவுக்கு எவ்வளவு பங்கு?

Tags :
Advertisement