முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்..!! வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! வானிலை மையம் எச்சரிக்கை..!!

A new low pressure area is likely to form in the Bay of Bengal, according to the Chennai Meteorological Department.
03:14 PM Jul 16, 2024 IST | Chella
Advertisement

வங்கக்கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (ஜூலை 16) தெற்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய விதர்பா நில பகுதிகளில் நிலவுகிறது. மேலும், ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஜூலை 19ஆம் தேதி உருவாக வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, ஜூலை 16ஆம் தேதியான இன்று, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும்; கோவை மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூலை 17ஆம் தேதியான நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More : BREAKING | தமிழக உள்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்..!! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!!

Tags :
நீலகிரிமிக கனமழைரெட் அலர்ட்வானிலை ஆய்வு மையம்
Advertisement
Next Article