4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு…! 3 மாவட்டங்களுக்கு இன்று "ரெட் அலர்ட்"…!
இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை (டிசம்பர் 4ஆம் தேதி) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
பொதுவாக ரெட் அலெர்ட் என்பது நிர்வாக காரணங்களுக்காக விடுக்கப்படுவது.மழை பொழிவை பொறுத்தவரை 12 செ.மீ முதல் 25 செ.மீ க்குள்ளாக மழை இருந்தால் அது ஆரஞ்சு அலர்ட் எனப்படும்,24 மணிக்குள் 20 செ.மீ மேலாக ஒரு பகுதியில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருந்தால் அது ரெட் அலர்ட் எனப்படும். வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக வடகடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, அதாவது ஆரஞ்சு அலர்ட விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது புயலின் தீவிரம் மற்றும் நகர்வின் காரணமாக மழையின் தீவிரம் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளதால் இன்று மற்றும் நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் தீவிர புயலாக உருவாகியுள்ளது, சென்னையிலிருந்து தென்கிழக்கு திசையில் 250 கி.மீ. தொலைவில் தற்போது நிலைகொண்டுள்ளதாகவும், இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் ஒட்டிய பகுதிகளில் நாளை முற்பகல் வரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக மணிக்கு 65-80 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசும் என் கூறப்பட்ட நிலையில் தற்போது தீவிர புயல் எனில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த மிக்ஜாம் புயல் டிசம்பர் 5ஆம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புயலின் தீவிரம் காரணமாக நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு அதிகனமழை இருக்கும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.