குழந்தைகள் முதல் சுகர் பேஷண்ட் வரை, கட்டாயம் இந்த சப்பாத்தியை சாப்பிட வேண்டும்!! டாக்டர் அட்வைஸ்..
பாலை விட அதிக கால்சியம் கொண்டது ராகி. இதனால் தான் குழந்தையின் முதல் உணவாக கூட பலர் ராகியை கொடுப்பது உண்டு. நம்மில் பலர் ராகியை உணவாக இல்லாமல் மருந்தாக நினைப்பது உண்டு. பெரும்பாலும் நாம் குழந்தைகளுக்கு ராகியை கூழாக கொடுப்பதால், அவர்களும் ராகியை மருந்தாக நினைத்து விடுகின்றனர். இதனால் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு எப்போதும் ராகியை கூழாக மட்டும் கொடுக்காமல் சப்பாத்தி போன்று செய்து கொடுத்தால், கட்டாயம் அவர்கள் விர்ம்பி சாப்பிடுவர்கள். குழந்தைகள் மட்டும் இன்றி, பெரியவர்களுக்கும் இந்த சப்பாத்தி பல நன்மைகளை தரும்.
ஆம், ராகி மாவில் சப்பாத்தி சாப்பிட்டு வந்தால் சுகர் அளவு குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள். அப்படியான ராகி சப்பாத்தி எப்படி சாஃப்டாக தயார் செய்யலாம் என்பாதை தெரிந்துக் கொள்ளுங்கள். இதற்க்கு முதலில் சிறிது தண்ணீரில் உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின்னர், அந்த தண்ணீரை ராகி மாவுடன் சேர்த்து ஒரு முறை கலந்து விடுங்கள். பின்னர், அடுப்பை ஆப் செய்து விட்டு, மாவை ஒரு மூடியால் மூடி வைத்துவிடுங்கள்.
இப்போது மாவில் இருக்கும் சூடு நன்கு ஆறிய பிறகு, அந்த மாவை சப்பாத்தி மாவு பிசைவது போல் நன்கு பிசைந்து விடுங்கள். பின், வழக்கம் போல் மாவை உருண்டையாக உருட்டி, மெலிதாக தேய்த்து, இதன்பிறகு, சூடாக இருக்கும் தோசைக் கல்லில் போட்டு எடுத்துக் கொள்ளவும். இப்படி நீங்கள் செய்தால், சுவையான ஆரோக்கியமான ராய் சப்பாத்தி ரெடி..
Read more: 40 வயதுக்கு மேல் அசைவ உணவு சாப்பிட்டால் அபத்தா? டாக்டர் சிவராமன் அட்வைஸ்..