For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பொங்கலன்று பல காய்கறிகளை வைத்து இப்படி அவியல் செய்து பாருங்க.!?

04:50 AM Jan 15, 2024 IST | 1newsnationuser5
பொங்கலன்று பல காய்கறிகளை வைத்து இப்படி அவியல் செய்து பாருங்க
Advertisement

பொதுவாக பொங்கல் திருநாள் அன்று பல காய்கறிகளை வைத்து குழம்பாக செய்து பால் பொங்கலுக்கு வைத்து கொள்வார்கள். எல்லா வருடமும் இப்படி குழம்பு செய்வதற்கு பதிலாக இந்த வருடம் வித்தியாசமாக பல காய்கறிகளை வைத்து குழம்புடன், அவியலும் செய்து பாருங்கள். அவியல் எப்படி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்

Advertisement

தேவையான பொருட்கள்

அவரக்காய், புடலங்காய், கத்திரிக்காய், மஞ்சள் பூசணி, முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, வாழைக்காய், சக்கரை வள்ளி கிழங்கு, மரவள்ளி கிழங்கு, மொச்சை - தேவையான அளவு நறுக்கிய காய்கறிகள்
பச்சை மிளகாய் - 3, மஞ்சள் தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, தேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி அளவு, கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, சோம்பு - 1ஸ்பூன், கருவேப்பிலை - ஒரு கொத்து தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை
முதலில் குக்கரில் ஒரே அளவு நறுக்கிய காய்கறிகளை முழுவதுமாக போட்டு அதில் கீறிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சீரகம், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேக விட வேண்டும். துருவிய தேங்காயை அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, சோம்பு போட்டு தாளிக்க வேண்டும். அதில் வேக வைத்த காய்கறிகளை சேர்த்து அரைத்து வைத்த தேங்காய் கலவையையும் சேர்க்க வேண்டும். பின்பு தண்ணீர் வற்றி தேங்காய் கலவை காய்கறியுடன் நன்கு சேர்ந்து வரும். பின் கிளறி விட்டு இறக்கினால் சுவையான காய்கறி அவியல் ரெடி.

Tags :
Advertisement