"எத்தனை தோசை சாப்பிட்டாலும் வயிறு நிறையாது" சுவையான ஆந்திர காரசட்னி தோசை எப்படி செய்யணும் தெரியுமா.!
தற்போது பலரது வீட்டிலும் காலை மற்றும் இரவு உணவாக தோசை இட்லி தான் அடிக்கடி சாப்பிட்டு வருகிறோம். ஒரே மாதிரி தோசை, சட்னி செய்து கொடுத்தால் சாப்பிட பலருக்கும் பிடிக்காமல் காலை உணவை தவிர்த்து வருகின்றனர். இதற்கு பதிலாக இந்த ஆந்திர காரதோசை செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த தோசையை எப்படி செய்யலாம் என்பதை குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: காய்ந்த மிளகாய் - 50 கிராம், புளி - நெல்லிக்காய் அளவு, பூண்டு - 20பல், சின்ன வெங்காயம் உரித்தது - 1கப், கறிவேப்பிலை - கைப்பிடியளவு, நல்லெண்ணெய் - தேவையான அளவு, கடுகு,உளுத்தம் பருப்பு, கல் உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: முதலில் காய்ந்த மிளகாய் மற்றும் புளியை தனித்தனியாக தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்பு ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்ததும் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைக்க வேண்டும்.
பின்பு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த காய்ந்த மிளகாய் மற்றும் புளியை தண்ணீருடன் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்பு வதக்கி ஆறவைத்த சின்ன வெங்காயம், பூண்டு கலவையை சேர்த்து மீண்டும் நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்பு எப்போதும் போல தோசையை வார்த்து அதன் மீது இந்த ஆந்திர கார சட்னி கலவையை ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து தேய்த்து விட வேண்டும். குழந்தைகளுக்கு இந்த தோசையை சாப்பிட தரும் போது இந்த கார சட்னியுடன் சிறிது வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம். இது இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடைய கலவையாக இருப்பதால் குழந்தைகளும் விரும்பி உண்ணுவார்கள்.