Back Pain: முதுகு வலி இந்த காரணங்களினால் கூட வரலாம்.? உடனே மருத்துவரை பாருங்க.!
Back Pain: பொதுவாக நாம் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருப்பதற்கு நம் உடலில் உள்ள எலும்புகளின் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். அந்த வகையில் முதுகெலும்பின் ஆரோக்கியம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது. தற்போதுள்ள நவீன கால கட்டத்தில் பலரும் முதுகுவலியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு அதிகப்படியான மன அழுத்தமும், ஊட்டச்சத்தான உணவுகளை சாப்பிடாமல் இருப்பதும் தான் பெரும்பான்மையான காரணமாக இருந்து வருகிறது. மேலும் முதுகு வலி உடலில் ஏற்படும் ஒரு சில நோய் பாதிப்புகளினால் ஏற்படுகிறது. அவை என்னென்ன பாதிப்புகள் என்பதை குறித்து பார்க்கலாம்?
சுளுக்கு - அதிக எடை கூடிய பொருட்களை தூக்குவது, தசைகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் வேலையை நீண்ட நேரம் செய்வது போன்றவற்றால் முதுகு பகுதியில் சுளுக்கு ஏற்பட்டு வலி வருகிறது. இது பெரும்பாலான நேரங்களில் தானாகவே சரயாகிவிடும்.
கீல்வாதம் - நாம் அமர்வதற்கு நடப்பதற்கு என நம் உடலில் அசைவிற்கு முதுகு எலும்பு மிகவும் முக்கியம். இந்த எலும்பின் முக்கியமான பகுதியில் அடிபடும் போது கீல்வாதம் நோய் ஏற்படும்.
கீழ் முதுகு டிஸ்க் - முதுகெலும்பில் இருக்கும் வட்ட பகுதியை டிஸ்க் என்று குறிப்பிடுகின்றனர். இதில் உள்ள ஜெல் போன்ற திரவம் முதுகெலும்பை விட்டு விலகி வெளியே வந்து நரம்புகளில் அழுத்தம் ஏற்படும். இந்த நேரத்தில் முதுகெலும்பு முதல் கால் பகுதி வரை பயங்கரமாக வலி ஏற்படும். இதனையே கீழ்முதுகு டிஸ்க் பிரச்சினை என்று குறிப்பிடுகின்றனர்.
முதுகுத்தண்டு பிரச்சனை - முதுகெலும்பு அருகில் இருக்கும் நரம்பு பகுதியுடன் இணைந்து ஒரு அழுத்தத்தை கொடுக்கும். இதுவே நமக்கு அதிகப்படியான முதுகு வலியை ஏற்படுத்தும். இந்த வலி ஏற்படும் போது நீண்ட நேரம் படுக்க முடியாது.
ஸ்கோலியோசிஸ் - உயரமாக தலையணை வைத்து படுக்கும் போது, நீண்ட நேரம் முதுகை வளைத்து உட்காருவது போன்ற நேரங்களில் முதுகெலும்பு தண்டு வளைந்துவிடும். இதற்கு முறையான சிகிச்சைகள் எடுத்து கொண்டால் உடனடி பலன் கிடைக்கும்.
சிறுநீரக கல் - இந்த பிரச்சனை ஏற்படும் போது அடி முதுகு மற்றும் இடுப்பு பகுதியுடன் சேர்ந்து வலி ஏற்படும். இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.