காலையில் எழும்போது கண் பூளை அதிகமா இருக்கா.? இது எதனால் ஏற்படுகிறது.? இதனால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு.!
அதிகாலையில் கண்விழிக்கும் போது கண்களின் ஓரத்தில் அழுக்கு படிந்து வெள்ளை நிறத்தில் சளி மற்றும் எண்ணெய் போன்று இருப்பதை கவனித்திருப்போம். இது பொதுவாக கண் பூளை என்று அழைக்கப்படுகிறது. இது எதனால் உருவாகிறது இதன் காரணமாக நம் கண்களுக்கு ஏதேனும் ஆபத்து இருக்கிறதா.? என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக கண்களில் உருவாகும் பூளை என்பது சளி,எண்ணெய் மட்டும் சருமத்தில் உருவாகும் அழுக்குகளின் தொகுப்பாகும். சில நேரங்களில் இது திரவ நிலையில் இருக்கும். சில சமயங்களில் இது வறண்டு காணப்படும். பொதுவாக இது வெளியேறுவது கண்களுக்கு நன்மையானது தான். எனினும் இவற்றின் அளவு மற்றும் தன்மையை பொறுத்து இந்த உலகின் அபாயத் தன்மை மாறுபடுகிறது. இரவில் உறங்கும் போது கண்களில் உருவாகும் அழுக்கு வெளியேறுவதில்லை. இது கண்களில் ஓரத்தில் தங்கி விடுகிறது.
இருப்பினும் இந்தக் கண் பூளையுடன் கண்கள் சிவந்து இருத்தல் மற்றும் கண்களில் அரிப்பு இருந்தால் அது கிருமிகளின் தொற்றாக இருக்கலாம். அப்படி இருக்கும்போது கண் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. சில நேரங்களில் பாக்டீரியா தொற்றுக்களால் ஏற்படும் கண் வலி மற்றும் கண் அலர்ஜி போன்றவற்றின் காரணமாகவும் கண்களில் ஊளையுடன் கண் எரிச்சல் மற்றும் கண்கள் சிவந்து இருக்கலாம். இவற்றிற்கு மருத்துவர்கள் பரிந்துரையுடன் சொட்டு மருந்துகள் பயன்படுத்தலாம்.
விழி வெண்படல அலர்ஜி காரணமாகவும் கண்களில் பூளை மற்றும் கண் எரிச்சல் ஏற்படலாம். இவற்றிற்கு கட்டாயம் மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் பல நேரங்களில் அதிகமாக கணினி மற்றும் செல்போன்களை பயன்படுத்தும் போது நம் கண்கள் வறண்டு அதன் மூலமாகவும் கண்களில் பூளை உருவாகும். இவற்றிற்கு சொட்டு மருந்துகளை பயன்படுத்துவது நல்ல தீர்வாக இருக்கும். மேலும் அதிக தூசி உள்ள இடங்களுக்கு செல்லும் போது கண் கண்ணாடி அணிந்து செல்வது சிறந்தது.