பெற்றோர்களே கவனம்!! பெண் குழந்தைகள் சிறு வயதில் பூப்படைய இது தான் காரணம்.. மருத்துவர் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்..
தற்போது உள்ள காலகட்டத்தில், பெண் பிள்ளைகள் சிறு வயதிலேயே பூப்படைகிறார்கள். பலர், இப்படி பெண் குழந்தைகள் சிறுவயதில் பூப்படைய பிராய்லர் கோழிகள் தான் காரணம் என்று கோழிகள் மீது பழியை போட்டு விடுகிறார்கள். ஆனால் அது மட்டும் காரணம் இல்லை. பெண் குழந்தைகள் தற்போதெல்லாம் 7 அல்லது 8 வயதில் கூட வயதிற்கு வந்து விடுகிறார்கள். இதற்க்கு உடல் பருமன், செல்போன், டிவி போன்ற மின்னணு சாதனங்களை பார்ப்பது, உடற்பயிற்சியின்மை போன்றவையும் முன்கூட்டியே பருவமடைவதற்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். முன்கூட்டிய பருவமடைதலுக்கான காரணங்களைப் புரிந்து கொள்ள பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக மருத்துவர் கூறுகிறார்.
பூச்சிக்கொல்லிகள், உணவில் பயன்படுத்தப்படும் பதப்படுத்தும் ரசாயனங்கள் (preservatives), மாசுபாடு, உடல் பருமன் போன்றவை வெளிப்புற காரணங்களாக ஒரு பக்கம் இருதாளும். மரபணு கோளாறு, உடலின் சர்க்காடியன் ஒத்திசைவு சீர்குலைவதும் முக்கிய காரணங்களாக உள்ளது. அதிகப்படியாக டிஜிட்டல் சாதனங்களில் நேரம் செலவிடுவது மறைமுகமாக முன்கூட்டியே பருவமடைவதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறுகிறார். பொதுவாக, மூளையில் இருந்து வெளியாகும் மெலடோனின் ஹார்மோன் தான் நாம் தூங்க உதவி செய்கிறது. ஆனால் செல்போன்,கணினி, டிவி போன்ற டிஜிட்டல் திரையில் நேரத்தை அதிகம் செலவு செய்வதால் தூக்க சுழற்சியை அதாவது சர்க்காடியன் ரிதத்தை சீர்குலைக்கிறது.
இந்த ஹார்மோன் நமது பாலியல் ஹார்மோன்களை கட்டுப்படுத்த உதவுகிறது, ஆனால் மெலடோனின் சமநிலையில் இல்லாததால், பாலியல் ஹார்மோன்கள் விரைவாக வெளியிடப்படுகின்றது. பெண் குழந்தைகள் முன்கூட்டியே பருவமடைவதால் அவர்களுக்கு உளவியல் ரீதியான எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகின்றது. இதனால் உங்கள் பெண் பிள்ளைகளின் நலனை கருத்தில் கொண்டு, டிஜிட்டல் திரையில் அவர்கள் செலவிடும் நேரத்தை குறைத்து, அவர்களை உடற்பயிற்சி செய்ய ஊக்கப்படுத்துங்கள்.
Read more: வெந்நீரில் குளிப்பவரா நீங்கள்?? கட்டாயம் உங்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படும்..