பிராய்லர் கோழி சாப்பிடுவதால், பெண் குழந்தைகள் சீக்கிரம் பூப்படைந்து விடுவார்களா? மருத்துவர் அளித்த விளக்கம்..
இன்றைய காலகட்டத்தில் இருக்கும் பாதி உடல் நல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் உணவு முறை தான். கண்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவதால், நமது உடல் நலம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. குறிப்பாக வகை வகையாக விற்கப்படும் சிக்கன் தொடர்பான உணவுகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். குறிப்பாக பிராய்லர் கோழி அதிகம் விரும்பி சாப்பிடப்படுகிறது. நீண்ட நாட்களாகவே பிராய்லர் கோழி உடலுக்க நல்லதா இல்லையா என்ற விவாதம் நடைபெற்று வருகிறது. பிராய்லர் கோழி செயற்கை முறையில் வளர்வதால், இது நம் உடலுக்கு கெடுதல் என்ற கருத்து இருந்து வருவது உண்டு.
ஆனால் அது உண்மை இல்லை. ஒரு கோழி வளர 3 மாதங்கள் ஆகும் என்றால், இந்த பிராய்லர் கோழிகள், 6-8 வாரங்களில் வளர்ந்துவிடும். இந்த கோழிகள் சீக்கிரம் வளர, ஹார்மோன் ஊசி ஏதாவது போடுகிறார்களா என்ற அச்சம் உங்களுக்கு வேண்டாம். ஏனென்றால், ஹார்மோன் ஊசி விலை அதிகம் என்பதால், அதனை எல்லா கோழிகளுக்கும் பயன்படுத்த முடியாது. ஒரு வேலை அப்படி பயன்படுத்தினால் நாம் கோழிக்கறி வாங்க ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டும். இதனால் ஹார்மோன் ஊசி போடுவது கிடையாது. இந்த கோழியை சாப்பிடுவதால், பெண் குழந்தைகள் சீக்கிரமாக பூப்படைந்து விடுவார்கள் என்ற கருத்து உள்ளது.
ஆனால் இது உண்மை இல்லை. டீன் ஏஜ் வயதில் உள்ள பெண்களுக்கு இருக்கும் உடல் பருமன் பிரச்னையால் தான், அவர்கள் சீக்கிரமாக வயதிற்கு வந்துவிடுகிறார்கள். இதனால் பிராய்லர் கோழி சாப்பிட்டால் அவர்கள் விரைவில் வயதிற்கு வந்துவிடுவர்கள் என்ற அச்சம் உங்களுக்கு வேண்டாம். டீன்ஏஜ் வயதில் கட்டாயம் அவர்கள் உடலுக்கு தேவையான புரோட்டின் சத்துக்கள் கிடைக்க வேண்டும். அதற்க்கு முக்கிய பங்கு வகிப்பது சிக்கன் தான். அதே சமயம், உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க, சிக்கன் மிக அவசியமான ஒன்று என்று பிரபல மருத்துவர் கூறியுள்ளார்.