For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தீவிர தலைவலியால் அவதிப்படுறீங்களா.? இதுவும் ஒரு காரணமாக இருக்கும் தெரிஞ்சுக்கோங்க.!?

04:54 PM Feb 24, 2024 IST | 1newsnationuser5
தீவிர தலைவலியால் அவதிப்படுறீங்களா   இதுவும் ஒரு காரணமாக இருக்கும் தெரிஞ்சுக்கோங்க
Closeup of young man touching temples with fingers as if suffering from severe migraine, feeling sick, isolated on gray background
Advertisement

பொதுவாக பலருக்கும் தலைவலி ஏற்படுவது சாதாரணமானது தான். பலவிதமான காரணங்களுக்காக தலைவலி ஏற்படுகிறது. பெரும்பாலானவருக்கு சளி, காய்ச்சல் போன்றவற்றாலும், தூக்கமின்மையினாலும், உடலில் தண்ணீர் பற்றாக்குறையினாலும் தலைவலி ஏற்படும். ஆனால் ஒரு சிலருக்கு அவர்களின் உடலில் பாதித்த நோயின் அறிகுறியாக தலைவலி இருந்து வருகிறது. இந்த தீவிரமான தலைவலியை பற்றி இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

Advertisement

1. தலைவலையில் குறுகிய தலைவலி, நீண்ட தலைவலி, ஒற்றைத் தலைவலி, பின்பக்க தலைவலி என பல வகைகள் இருந்து வருகின்றன. இந்த குறுகிய தலைவலி மற்றும் நீண்ட தலைவலி என்பது குளிர்ந்த காற்று நம் தலையில் தாக்கி  நரம்புகளில் வீக்கத்தை ஏற்படுத்துவதால் இந்த தலைவலி ஏற்படுகிறது.
2. ஒரு சிலருக்கு ஒற்றை தலைவலி ஏற்படுவதற்கு காரணமாக இருப்பது சைனஸ் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளாக இருக்கும். இந்த பிரச்சனைகள் நம் முகத்தில் உள்ள ஓட்டைகளில் நீர் தேங்குவதால் ஏற்படுகிறது. இதற்கு முறையாக மருத்துவரிடம் சென்று மருந்துகள் எடுத்துக் கொண்டாலே விரைவில் குணமாகிவிடும்.
3. மேலும் மூக்கில் உள்ள எலும்பு பகுதி வளைந்து இருந்தாலும், மூக்கினுள் ஜவ்வு வளர்ந்தாலும் தலைவலி ஏற்படும்.
4. கண்களில் பார்க்கும் திறன் குறைவடைந்தால் பின்பக்க தலைவலி ஏற்படும். மேலும் கண்களில் நீர்சத்து குறைபாடு ஏற்படும் போதும் இந்த தலைவலி உருவாகிறது.
5. மேலும் ஒரு சிலருக்கு ஒற்றை தலைவலி நீண்ட நாட்களாக இருந்து வரும். இப்படியானவர்களுக்கு திடீரென்று வாந்தி, மயக்கம் போன்ற உணர்வு ஏற்படும். வாந்தி எடுக்கும் பட்சத்தில் இந்த ஒற்றை தலைவலி சரியாகும். இது மூளை நரம்புகளில் கட்டி அல்லது அழுத்தம் இருந்தால் இந்த தலைவலி ஏற்படும். எனவே நீண்ட நாட்களாக தலைவலி இருக்கும்போது மருத்துவரின் அறிவுரை இல்லாமல் மாத்திரை எடுத்துக் கொள்ளக் கூடாது. உடனடியாக மருத்துவரை சந்தித்து அதற்குரிய சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது நன்மையை தரும்.

English summary : reasons for headache

Read more : மக்களே உஷார்.! பல் துலக்காமல் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் தெரியுமா.!?

Advertisement