பிரியாணியில், புதினா இலைகளை ஏன் கட்டாயம் சேர்க்க வேண்டும் தெரியுமா?
பொதுவாக நாம் புதினா இலையை சமையலில் வாசனைக்காக பயன்படுத்துவது உண்டு. ஆனால் அந்த புதினா இலையில் பல மருத்துவ பலன்கள் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், அழற்சி எதிர்ப்பு தன்மை புதினா இலைகளில் அதிகம் உள்ளது. இதனால், அஜீரணத்தை போக்க உதவுகிறது. இதனால் தான் பிரியாணி போன்ற உணவுகளில் புதினா சேர்க்கப்படுகிறது. மேலும், புதினாவில் பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் சி, டி, ஈ மற்றும் ஏ போன்ற பல சத்துக்கள் உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்து இது பெரிதும் உதவும்.
நாள்பட்ட நோயின் அபாயத்தை குறைக்க புதினா பெரிதும் உதவும், ஏனென்றால் உடலில் உள்ள சேதமடைந்த செல்களை புதினா பாதுகாக்கிறது. புதினா இலைகளில் அதிக அளவு உள்ள சாலிசிலிக் அமிலம், முகப்பரு மற்றும் முகத்தில் உள்ள தழும்புகளை குணமாகும். புதினா இலைகளில் ரோஸ்மரினிக் எனப்படும் அமிலம் அதிகம் உள்ளது. சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்ட இந்த அமிலம், ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிதும் உதவும். புதினா உங்கள் மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரலில் உள்ள நெரிசலை போக்க உதவுகிறது. எனவே, இது குளிர் மற்றும் சுவாசத்தை குணப்படுத்த உதவுகிறது. தீராத இருமலால் அவதிப்படுபவர்களுக்கு புதினா பெரிதும் உதவும்.
Read more: வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா நீங்கள்? அப்போ இதை கட்டாயம் படியுங்கள்..